March 28, 2023
  • March 28, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இயேசுவின் கடைசி விருந்தை கிண்டலடிக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்
June 30, 2020

இயேசுவின் கடைசி விருந்தை கிண்டலடிக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்

By 0 361 Views

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘வை நாட் ஸ்டுடியோஸ் ‘ சசிகாந்த் மற்றும் ‘ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் ‘ இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம் ‘.

தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, பட கதை இதுதான்.

லண்டனில் மாஃபியா கும்பலின் தலைவராக இருக்கிறார் ஜேம்ஸ். அவர் ஆட்களுக்கு குடைச்சல் கொடுக்கிறது புது குரூப். இந்த க்ரூபில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிலர் இருப்பதன் காரணத்தால், ஜேம்ஸ் இவர்களை அடக்க தனது முயற்சியால் இந்தியாவில் இருந்து தனுஷை வர வைக்கிறார்.

 

அங்கு சென்ற தனுஷ், உண்மை நிலவரம் அறிய வர வில்லன் டு ஹீரோ அவதாரம் எடுக்கிறார். அனைத்து டான்களையும் அழித்து முடிசூடா மன்னன் ஆகிறார் என்பது போன்றதாம் கதை.

இந்த படம் குறித்த ஒரு அப்டேட் நாளைக்கு வருகிறதாம்.

ஆனால் சமீபத்தில் ரிலீஸான அப்படத்தின் போஸ்டர் யேசு கிறிஸ்துவின் கடைசி விருந்து நிகழ்ச்சியை நக்கலடித்து இருப்பது போல் இப்போதே பிரச்சினை கிளம்பி விட்டது.

பரபரப்புக்கு மதங்களை தீண்டுவது தான் சமீபத்திய ட்ரெண்ட் போலிருக்கிறது… இதற்கு கார்த்திக் சுப்பராஜ் விதிவிலக்கல்ல.