December 9, 2023
  • December 9, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது பானங்கள் கடத்திய படத் தாரிப்பாளர் கைது – வீடியோ
June 30, 2020

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது பானங்கள் கடத்திய படத் தாரிப்பாளர் கைது – வீடியோ

By 0 556 Views

சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு காரை நிறுத்தி போலீஸ் சோதனை இட்டபோது காரில் முழுக்க மது பாட்டில்கள் இருந்துள்ளன.

காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக காரின் உரிமையாளர் படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரில் கடத்தப்பட்ட மது வகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கலைச்செல்வன் எந்த படத் தயாரிப்பாளர் என்கிறீர்களா..?

பிரபல நடிகர் சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியான ‘ தாதா 87’ படத்தை தயாரித்தவர். இவரோடு காாரில் வந்த இன்னொரு வரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் விசாரணை நடந்து வருகிறது. காரில் மது புட்டிகள் கடத்தப்பட்ட வீடியோ கீழே….