August 10, 2026
  • August 10, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

50 ஆவது படம் ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்துள்ளது – விஜய் சேதுபதி

by by Sep 11, 2023 0

*நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான ‘மஹாராஜா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா!*

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் முதலாவதாக பேசிய இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத்,

“விஜய் சேதுபதி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான்….

Read More

என் 23 வருஷப் படம் சித்தா – நெகிழும் சித்தார்த்

by by Sep 11, 2023 0

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும் அதற்கு முன்பே மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த். 

கடந்த 23 வருடங்களாக இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து விட்ட சித்தார்த், தான் நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தப் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இப்போது தன் ‘எடாக்கி என்டர்டைன்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்திருக்கும் படம் ‘சித்தா’. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ சேதுபதி ‘ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இயல்பான ஒரு ஹீரோவாக வருகிறார்…

Read More

அங்காரகன் திரைப்பட விமர்சனம்

by by Sep 10, 2023 0

நவ கோள்களில் செவ்வாய் கிரகத்துக்கு பெயர்தான் அங்காரகன். ஆனால் படத்தில் அந்த செவ்வாய் கோளுக்கும், கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வாழ்ந்து மறைந்த ஒரு மனிதன்தான் அங்காரகன்.

அவன் பேயாக மாறி மக்களை அபேஸ் செய்கிறான் என்கிற நம்பிக்கைதான் லைன்.

குறிஞ்சி மலையில் அமைந்த ஒரு இயற்கை எழில் வாழ்ந்த தங்குமிடம். அங்கே பல பேர் வந்து தங்கிச் செல்லும் சூழலில் ஒரு பெண் மாயமாவது தெரிய வருகிறது. 

அதை விசாரிக்க வருகிறார் காவல் அதிகாரியான சத்தியராஜ். விசாரிக்கும் போது…

Read More

ரெட் சாண்டல் திரைப்பட விமர்சனம்

by by Sep 10, 2023 0

கடின வேலைகளைச் செய்பவர்கள் “உயிரைக் கொடுத்து வேலை செய்கிறேன்..!” என்பார்கள். ஆனால், உண்மையிலேயே உயிரைக் கொடுத்து செய்யும் வேலைகள் சில இருக்கின்றன. அதில் ஒன்றுதான் செம்மரக் கடத்தல். 

திருப்பதிக் காடுகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்க அவற்றை கள்ளத்தனமாகக் கடத்த விரும்புபவர்கள், மரங்களை வெட்ட தமிழ்நாட்டில் இருந்து வறுமையில் உள்ளவர்களைப் பயன்படுத்துவதும் போலீஸ் வேட்டையில் அந்த அப்பாவிகள் இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தக் கதையை கண்ணீரும், ரத்தமுமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம்.

வட சென்னையில் குத்துச்சண்டை…

Read More

ஸ்ட்ரைக்கர் திரைப்பட விமர்சனம்

by by Sep 10, 2023 0

இந்த வாரத்துக்காக ஆவி வந்த படம் இது. 

இன்னொரு ஆவிப் படமா என்று நாம் அலுத்துக் கொண்டு உட்காரும்போது ஆவி உலகம் என்பது புனைவு அல்ல – இயற்கையுடன் சம்பந்தப்பட்டதுதான் என்று ஒரு மகா விளக்கம் கொடுத்துப் படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு.

அடடே… பரவாயில்லையே, ஆவி கதையில் ஒரு அறிவியல் விளக்கம் சொல்லப் போகிறார் போலிருக்கிறது என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் ஓஜா போர்டைக் கையில் வைத்துக்கொண்டு கதாநாயகன் ஜஸ்டின் விஜய் ஆவிகளுடன் பேச ஆரம்பித்து விடுகிறார்.

முன்னாள் கார்…

Read More

ஜவான் திரைப்பட விமர்சனம்

by by Sep 7, 2023 0

இந்திப் படங்களைப் பார்த்து கோலிவுட் வாயைப் பிளந்தது ஒரு காலம். இப்போது தொழில்நுட்ப ரீதியில் கோலிவுட் படங்கள் இந்தியாவிலேயே முன்னிலை வகிக்க… பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

அப்படி இதற்கு முன்னர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பாலிவுட்டில் படம் இயக்கிப் பெயர் வாங்கிய நிலையில், இயக்குனர் அட்லியின் திறமை கண்டு, தான் நடிக்கும் தன்னுடைய சொந்தப் படத்தை இயக்கச் சொல்லி ஷாருக்கான் அவரை அணுகியதில் இருந்து இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு தொடங்கியது.

பான் இந்தியப் படமாக…

Read More

நூடுல்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Sep 5, 2023 0

உலகிலேயே மிகப்பெரிய வன்மமும், பழிவாங்கலும் ஒருவரது ஈகோவைச் சுட்டு விடுவதில் இருந்துதான் தொடங்குகிறது. அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.

மெல்லிய லைன்தான் இந்த படத்தின் கதைக்களம். அதுவும் ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவருக்குள்ளேயே முடிகிற கதை. பின் இரவில் தொடங்கி அடுத்த நாள் காலைக்குள் முடிவுறும் இந்தக் கதை ஒரே ஒரு காட்சியில் மட்டுமே  காம்பவுண்ட் தாண்டி பக்கத்து தெருக் கடை வரை போகிறது.

நடுத்தர வர்க்கக் குடியிருப்பின் ஒரு பகுதி. வார இறுதி நாட்களில் ஒரு காம்பவுண்டுக்குள்…

Read More

தமிழ்க்குடிமகன் திரைப்பட விமர்சனம்

by by Sep 5, 2023 0

“நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சமுதாயம் அதை முடிவு செய்யக் கூடாது..!” என்று நினைத்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த சின்னசாமியால் அதனை சாதிக்க முடிந்ததா என்பதே இந்தப் படத்தின் கதை.

ஆண்டான் அடிமை சமூகத்தின் அடிப்படையில் காலம் காலமாகக் கைகட்டி சேவை செய்துவிட்ட இனத்தைச் சேர்ந்த சின்னசாமியாக வருகிறார் இயக்குனர் சேரன்.

இனியாவது கட்டிய கைகளை விடுவித்து சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று விரும்புகிறார். 

அதற்காக கிராம அதிகாரி தேர்வெழுதப்…

Read More

என் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும் – இறைவன் இயக்குனர் அகமது

by by Sep 4, 2023 0

ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ டிரெய்லர் உறைய வைக்கும் பல திரில்லர் காட்சிகளை கொண்டுள்ளது!

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் பொருந்திப் போகும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை டிரெய்லர் தெளிவாக காட்டுகிறது.

2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த…

Read More

லைகா சுபாஸ்கரனால் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன – பி. வாசு

by by Sep 4, 2023 0

*சந்திரமுகி 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு*

லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ்,…

Read More