June 23, 2026
  • June 23, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

V3 திரைப்பட விமர்சனம்

by by Jan 6, 2023 0

பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்களை வைத்து நிறைய படங்கள் வந்து விட்டன. பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவர்களுக்கும் ரகம் ரகமான தண்டனைகள் கொடுத்தாயிற்று.

அந்த வரிசையில் இந்தப் படமும் சேரும் என்றாலும் இதில் ஒரு வித்தியாசமான முயற்சியாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க என்ன செய்யலாம் என்கிற தீர்வையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.

அது சரியா இல்லையா என்று இன்னொரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது படம்.

இரண்டு பெண்களின் தந்தையாக இருக்கிறார் ஆடுகளம் நரேன். அவர்களில்…

Read More

கடைசி காதல் கதை திரைப்பட விமர்சனம்

by by Jan 2, 2023 0

80, 90 கிட்ஸ் காலத்தில் காதலில் தோற்றவர்கள் தாடி வளர்த்துக் கொண்டு பாடித் திரிவார்கள் – அல்லது மரணிப்பார்கள். இந்த 2கே கிட்ஸ் காலத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதற்கான உதாரணம் இந்தப் படம்.

தன் காதலி தனக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் பொறுக்க முடியாத நிலையில் காதல் தோல்வியுற நிறைய புத்தகங்கள் படித்து, காதலில் தோல்வி ஏற்படாமல் இருக்கவும் மனிதர்களிடத்தில் பேதங்கள் இல்லாமல் வாழவும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார் நாயகன் ஆகாஷ் பிரேம்குமார்.

அது ஆதி மனிதர்கள் வாழ்ந்தது…

Read More

காலேஜ் ரோடு திரைப்பட விமர்சனம்

by by Jan 1, 2023 0

எல்லா மக்களின் அடிப்படை உரிமையான கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எப்படி எட்டாக்கனியாகிப் போகிறது என்பதை விளக்கும் படம்.

குறிப்பாக எல்லா வங்கிகளிலும் கல்வி கடன் வழங்கும் திட்டம் இருக்க அவை எப்படி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய் அமர்சிங்.

சென்னையில் எளியவர்கள் அத்தனை சீக்கிரம் சேர முடியாத கல்லூரியில் மெரிட்டில் சேர்கிறார் நாயகன் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு பிடித்த லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த…

Read More

ராங்கி திரைப்பட விமர்சனம்

by by Dec 31, 2022 0

ஹீரோ இல்லாத கதையில் ஹீரோயினே அந்த வேலையை ஏற்பதுதானே முறை..? அப்படி த்ரிஷாவே இந்த படத்தின் ஹீரோவாக… அதிலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய படம் இது.

யாருக்கும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட நாயகி திரிஷா கதை நாயகியாக… பெயரும் அதற்கேற்றாற்போல் தையல் நாயகி என்ற பாத்திரம் ஏற்கிறார். படத்தில் அவர் யாருக்கும் அஞ்சாத பத்திரிகையாளர்.

ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை வடிவத்துக்கு அற்புதமான திரைக்கதை அமைத்து அதை உலகத் தரத்தில் உருவாக்கி இருக்கிறார் அவரது சீடரான இயக்குனர் சரவணன்.

முகப்புத்தகத்தில்…

Read More

ஓ மை கோஸ்ட் திரைப்பட விமர்சனம்

by by Dec 30, 2022 0

ஓடுகிற குதிரை ஒன்று கிடைத்துவிட்டால் போதும் எந்தப் பந்தயத்திலும் கலந்து கொள்ளலாம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் யுவன்.

அந்த ஓடுகிற குதிரை வேறு யாரும் அல்ல, உலகப் புகழ் பெற்ற நடிகை சன்னி லியோன் தான். அவர் மட்டுமல்லாமல் யோகி பாபுவும் உடன் இருக்க இந்த ப்ராஜெக்டை எந்த தயக்கமும் இல்லாமல் தயாரித்திருக்கிறார்கள் வா மீடியா சார்பாக வீர சக்தியும், சசிகுமாரும்.

தலைப்பிலேயே கோஸ்ட் இருப்பதால் இது எந்த விதமான படம் என்பது…

Read More

டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்

by by Dec 28, 2022 0

பெண்கள் விண்வெளிக்கே செல்லும் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு பெண் டாக்ஸி ஓட்டும் இந்தக் கதை புதுமையானது இல்லைதான். ஆனால் அப்படி டாக்ஸி ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் அவர் சந்தித்தது என்ன, சாதித்தது என்ன என்பதைப் புதுமையாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின்.

பக்கவாதம் வந்த அம்மாவுடன் வாழும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் இறந்து போன அப்பா செய்த வேலையான டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் மூவர் கொண்ட ஒரு கூலிப்படை பலரைக் கொன்று கொண்டிருக்க,…

Read More

உடன்பால் திரைப்பட விமர்சனம்

by by Dec 26, 2022 0

தியேட்டர்களில் எந்தப் படமும் வெளியாகலாம். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு என்று படங்களுக்கு சில தகுதிகள் உண்டு. அந்த தகுதியை சரியாகப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

குடும்பத்துடன் அமர்ந்து சிரித்து மகிழ்ந்து  பார்க்க வேண்டிய படமாக அமைந்திருக்கும் உடன்பால், வாழ்க்கையின் நிலையாமையையும், தேவைகளைக் கொண்ட மனித மனங்களின் உக்கிரங்களையும் எள்ளி நகையாடி சாடுகிறது.

நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருக்கும் சார்லி, எந்த விதமான குணசித்திர வேடத்தையும் ஏற்று நடிக்க வல்லவர் என்பது தெரிந்த செய்திதான். ஆனால் இதுவரை…

Read More

புரொஜக்ட் சி – சாப்டர் 2 திரைப்பட விமர்சனம்

by by Dec 25, 2022 0

ஐந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை சுவாரஸ்யம் தட்டாமல் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வினோ.

நாயகனாக ஸ்ரீ. தண்ணீர் கேன் தொழிற்சாலையில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பவருக்கு அவரை ஒருதலையாக காதலித்த பெண்ணால் வேலை போகிறது.

வாழ்க்கை வெறுத்து தற்கொலை வரை போகும் அவருக்கு அடுத்து உடல்நிலை சரியில்லாத ஒரு விஞ்ஞானியை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்கிறது.  அவர் கண்டுபிடித்த ஒரு பார்முலா மருந்தை வைத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்.

இந்த விஷயம் தெரிந்து ஸ்ரீயிடம் இருக்கும் பணத்தை…

Read More

நெடுநீர் திரைப்பட விமர்சனம்

by by Dec 25, 2022 0

வன்முறைப் பாதைக்கு செல்லும் நாயகனின் (இன்னொரு) கதையைக் கொண்ட படம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்றிருக்க இதில் வன்முறைப் பாதைக்குச் செல்லும் நாயகன் ராஜ் கிருஷ்ணன் என்ன ஆகிறார் என்பது கதை.

சிறு வயதில் இருந்து ஒன்றாக வளரும் ராஜ்கிருஷ்ணன், மற்றும் இந்துஜா வாழ்க்கை சூழலால் பிரிகின்றனர். எதிர்பாராத விதமாக சண்டையில் ஒருவனை ராஜ் கிருஷ்ணன்  கொன்று விட, இதைக் கண்ணுறும் தாதாவான அண்ணாச்சி சத்யா முருகன், அவரை மீட்டு  தன் அடியாளாக வைத்துக்கொள்கிறார்.

தன் உயிரைக்…

Read More

பாசக்கார பய திரைப்பட விமர்சனம்

by by Dec 25, 2022 0

90களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான விக்னேஷை இப்போது இருக்கும் 2கே கிட்ஸ் அறிவார்களா என்பது தெரியாது. ஆனால் 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் அறிமுகமானவர்தான் விக்னேஷ்.

தமிழ் சினிமாவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிற பாலு மகேந்திராவின் கரங்களால் ஹீரோவாக அறிமுகமாக இருந்த விக்னேஷ் அப்போது அது முடியாமல் போக பின்னாளில் அதே பாலு மகேந்திராவின் ராமன் அப்துல்லா படத்தில் இரு நாயகர்களில் ஒருவரானார்.

அப்படிப்பட்டவரை இப்போது ஹீரோவாக்கி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விவேக பாரதி.

Read More