September 15, 2025
  • September 15, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

தி ரோட் திரைப்பட விமர்சனம்

by by Oct 10, 2023 0

நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடப்பது இயல்பு. ஆனால் அதுவே திட்டமிட்டு நடந்தால்..? கேட்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா..? அப்படி ஜோடிக்கப்பட்ட ஒரு விபத்தின் மூலம் நம்மை பதைபதைப்புக்கு உள்ளாக்கி படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன்.

அடுத்த காட்சியில் பத்திரிகையாளராக வரும் நாயகி த்ரிஷா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கன்னியாகுமரி நோக்கிச் செல்ல முடிவெடுக்க, நமது பதற்றம் இன்னும் அதிகரிக்கிறது.

எதிர்பார்த்தது போலவே திரிஷா செல்லும் காரும் விபத்துக்குள்ளாகி கணவரும், குழந்தையும் கொல்லப்படுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத பரிதவிப்பில்…

Read More

தில்லு இருந்தா போராடு படத்தின் விமர்சனம்

by by Oct 10, 2023 0

பெரிய ஹீரோக்கள் – பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை விட சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் சின்ன ஹீரோக்களின் படங்கள்தான் பெரும்பாலும் சமூகத்துக்கு செய்தியைச் சொல்லக்கூடிய படங்களாக இருக்கின்றன.

அப்படி கார்த்திக் தாசை ஹீரோவாகக் கொண்டு எஸ்.கே.முரளிதரன் இயக்கியிருக்கும் படம்தான் இது.

அறிமுகக் காட்சியிலேயே நாயகன் கார்த்திக் தாஸ் ஒரு மரத்தடியில் வைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கிருந்து காட்சிகள் பின்னோக்கிப் போகின்றன.

ஏழைத் தம்பதிக்கு மகனாகப் பிறந்த கார்த்திக் தாஸ், ஒரு தங்கை இருந்தும், பொறுப்பின்றி தன்…

Read More

எனக்கு என்டே கிடையாது திரைப்பட விமர்சனம்

by by Oct 9, 2023 0

தன்னம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் முதல் படம் இயக்கும்போது அந்தப் படத்தில் தானே ஹீரோவாக நடிப்பார்கள். இதற்கு பார்த்திபனில் இருந்து பிரதீப் வரை உதாரணங்கள் சொல்லலாம். 

அந்த வரிசையில் சேர்கிறார் இந்தப் பட இயக்குனர் விக்ரம் ரமேஷ்.

இந்தப் படத்தின் முதன்மை நாயகனாக, கால் டாக்ஸி டிரைவராக வரும் அவருக்கு பெப்ஸி நழுவி விஸ்கியில் விழுந்தது போல் அடுத்தடுத்து அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன – ஒரு பப்பில் இருந்து நாயகி ஸ்வயம் சித்தாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது.

மிகப்பெரிய…

Read More

800 படத்தின் திரை விமர்சனம்

by by Oct 8, 2023 0

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் யாரும் எட்ட முடியாத உயரமான 800 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையைச் செய்தவர் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முத்தையா முரளிதரன்.

தமிழரான அவரது வாழ்க்கை சாதனைகள் நிரம்பியது என்றாலும் எத்தனை சோதனைகளைத் தாண்டி அதைச் சாதித்தார் என்பதை அந்தப் போராட்ட வலிகளோடு இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி.

முத்தையா முரளிதரனின் சிறு வயது முதலே அவரது வாழ்க்கை படத்தில் சொல்லப்படுகிறது. கிரிக்கெட் மீதான ஆசையால் அவர் உறைவிட பள்ளிக்குச் சென்றது…

Read More

இந்த கிரைம் தப்பில்ல திரைப்பட விமர்சனம்

by by Oct 7, 2023 0

பெண் இனத்துக்கு கொடுஞ்செயல் புரியும் காமுகர்களை சட்டத்தை மீறி தண்டித்தாலும் அந்த கிரைம் தப்பில்லை என்பதுதான் படத்தின் ஒன் லைன். இதைத் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் தேவகுமார்.

ஒரு பக்கம் கிராமத்துப் பெண் நாயகி மேக்னா இலன், நகரத்துக்கு வந்து மார்டனாகி செல்போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கு வரும் மூன்று வாலிபர்களோடு தனித்தனியாக அறிமுகமாகி அவர்களைக் காதலிப்பது போல் நடிக்கிறார். அது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இன்னொரு பக்கம், ஓய்வு…

Read More

ரத்தம் திரைப்பட விமர்சனம்

by by Oct 6, 2023 0

ஆணவக் கொலை கேள்விப் பட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் நிறைய வெறுப்புக் கொலைகளைக் காட்டுகிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். அது என்ன வெறுப்புக் கொலை..?

தனக்கு பிடித்த நடிகரைப் பற்றித் தவறாக எழுதிய பத்திரிகையாளர், தனது மதத்துக்கு எதிராக செயல்பட்டதாக ஒருவன் நம்பிய கலெக்டர் – இப்படித் தனி நபர்களின் வெறுப்புக்கு ஆளானவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

இது வழக்கமாக நாட்டில் நடப்பதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால்,  இப்படித் தனி மனித வெறுப்பின் பின்னணியில் வேறு ஒருவரின் சுயநலம் இருப்பதாக நம்புகிறார்…

Read More

ஷாட் பூட் த்ரீ திரைப்பட விமர்சனம்

by by Oct 6, 2023 0

தலைப்பைப் பார்த்த உடனேயே தெரிந்திருக்கும் ‘இது குழந்தைகளுக்கான படம்’ என்று. தலைப்பில் இருப்பது போலவே  ஒரு வகுப்பில் பயிலும் இரு பள்ளிச் சிறுவர்கள் மற்றும் சிறுமி என்ற மூவர்தான் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்கிறார்கள்.

கைலாஷ், பிரணதி, வேதாந்த்தான் அந்த மூவர். இந்த மூவரில் ஒருவன் குறைவான மதிப்பெண் எடுத்து விட்டான் என்பதற்காக மீதி இருவரும் தங்கள் மதிப்பெண்ணைக் கொடுத்து அவனைக் காப்பாற்ற நினைக்கும் அளவுக்கு ‘மார்க்’க பந்துக்கள்.

இவர்களில் கைலாஷின் பெற்றோரான வெங்கட் பிரபுவும், சினேகாவும்…

Read More

இறுகப்பற்று திரைப்பட விமர்சனம்

by by Oct 4, 2023 0

படத்துக்குப் படம் கத்தி, சுத்தி, துப்பாக்கி, பீரங்கி, ரத்தம் என்று சுத்திச் சுத்தி அடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இது போன்று எப்போதோ அபூர்வமான குடும்ப நலன் பேசக்கூடிய படங்கள் வருகின்றன – அதை முதலில் வரவேற்க வேண்டும்.

இதுபோன்று ஆரோக்கியமான படங்களைத் தருவதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோசும், அதே பொட்டன்ஷியலுடன் நல்ல படங்களை மட்டுமே எடுப்பேன் என்கிற அளவில் நேர்த்தியான கதைகளை எழுதி இயக்கிக் கொண்டிருக்கும் யுவராஜ் தயாளனும் சேர்ந்திருப்பதால் இந்தப் படத்துக்கு சற்று எதிர்பார்ப்பு…

Read More

சந்திரமுகி 2 திரைப்பட விமர்சனம்

ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் ஒரு பிராண்ட். அந்த பிராண்டின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை முறையே ராகவா லாரன்ஸ், லட்சுமி மேனன் போன்ற இடைநிலை நடிகர், நடிகைகளை வைத்து ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பி.வாசு.

கதை அப்படியே முந்தைய சந்திரமுகியை நகலெடுத்ததுதான் என்றாலும் அதில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்.

சம்பவம் நடந்த அதே சந்திரமுகி பங்களா இப்போது வடிவேலு வசம் இருக்கிறது.

பல காலம் வழிபடாமல் விட்ட தங்கள் குலதெய்வம் துர்க்கை…

Read More

வாழ்வு தொடங்குமிடம் நீதானே திரைப்பட விமர்சனம்

by by Sep 29, 2023 0

ஆணும் பெண்ணும் காதலித்து போரடித்து விட்டதாலோ என்னவோ இந்தப் பட இயக்குனர் ஜெயராஜ் பழனியும் தயாரிப்பாளர் – நடிகை நீலிமா மற்றும் அவரது கணவர் இசையும் பெண்ணும் பெண்ணும் காதலிக்கும் இந்த படத்தை உருவாக்கி விட்டார்கள்.

ஷார்ட் பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இந்தப் படம் தயாராகி ஒளிபரப்பாகிறது.

தரங்கம்பாடியில் கடற்கரையோரத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. அங்கே நாயகி நிரஞ்சனா நீதியாருக்கான திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நிரஞ்சனாவுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லாமல் ஏதோ ஒரு தவிப்பு இருப்பது…

Read More