May 9, 2024
  • May 9, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

செல்ஃபி திரைப்பட விமர்சனம்

by by Apr 3, 2022 0

தன்பிள்ளை ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும்  என்பது இன்றைய பெற்றோர்களின் கண்மூடித்தனமான கனவு. அதற்காக எப்பாடுபட்டாவது சேர்த்த பணத்தை நம்பிக் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம்.

அந்த பலவீனத்தையே பயன்படுத்திக்கொண்டு தனியார் கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மேனேஜ்மென்ட் சீட்’டுக்கு கணக்கில்லாத ரேட் வசூலித்துக் கொள்ளையடிப்பது இன்னொரு பக்கம்.
 
இதில் மூன்றாவது பக்கம் ஒன்றும் இருக்கிறது. மேற்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மருத்துவராகவோ பொறியாளராக வரவேண்டும் என்று தாங்களாகவே கனவுகண்டு அதைப் பிள்ளைகள் மேல்…

Read More

குதிரைவால் திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2022 0

கிடைத்தற்கரிய ஒரு பொருளை குதிரைக் கொம்பு என்பார்கள். இந்தப் பட இயக்குனர்கள் மனோஜ் மற்றும் ஷியாம் அப்படி ஒரு அரிய விஷயத்தை குதிரைவாலாக மாற்றியிருக்கிறார்கள்.

சினிமாவில் காட்சிப்படுத்தப்படும் கனவுகளுக்கும் நாம் நிஜத்தில் காணும் கனவுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சினிமாவில் வரும் கனவுகள் மிகுந்த லாஜிக்கோடு நிஜத்தின் நகல் போலவே காட்டி பின்னால் அதைக் கனவு என்று சொல்லி முடிப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் நாம் காணும் கனவுகளில் எந்த லாஜிக்கும் இருக்காது. நம் நினைவுப் படிமங்களில் தங்கிவிட்ட…

Read More

கிளாப் திரைப்பட விமர்சனம்

by by Mar 12, 2022 0

விளையாட்டை மூலமாகக் கொண்ட ஒரு மோட்டிவேஷன் கதைக்கு உலகமெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’ தான். ஒரு இலக்கை அடைய குறிவைத்து அது தன் வாழ்வில் நடக்காமல் போகும் ஒருவர் அந்த இலக்குக்கு இன்னொரு திறமையாளரைத் தயார் செய்து அதை அடைய வைக்கும் ‘டெம்ப்ளேட்’ தான் அது.

அந்த லைனை இந்தப்படத்திலும் பயன்படுத்தி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா. அதற்கு அவர் இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்திருப்பது ‘தட களம்’.
 
தடகளத்தில் ஓட்டப்பந்தய வீரராக…

Read More

எதற்கும் துணிந்தவன் திரைப்பட விமர்சனம்

by by Mar 10, 2022 0

சூர்யாவை சிங்கமாக அதிரி புதிரி ஆக்ஷனில் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஜெய்பீம் மாதிரியான படங்களில் அமைதியான ஆழமான நீதிமானாகவும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு முகங்களுமே ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவையாக இருக்க இந்த இரண்டையும் கலந்து ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

பட ஆரம்பமே திடுக்கிட வைக்கிறது. சூர்யா ஒருவரை கொலை செய்து விட்டார் என்று அவரது அம்மா சரண்யாவுக்கு தகவல் வர, தன் கணவர் சத்யராஜிடம் அவர், “நம்ம புள்ள ஒரு கொலை பண்ணிட்டானாம்…” என்று சொல்ல…

Read More

வலிமை திரைப்பட விமர்சனம்

by by Feb 24, 2022 0

உலகமெல்லாம் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ட்ரீட்டாக வந்திருக்கும் படம். ஆனால் அஜீத்துக்கு ஆக்‌ஷனைக் காட்டிலும் சென்டிமென்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்பதால் அதையும் கலந்து ஒரு கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். படம் அந்த அளவுக்குப் பின்னியிருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
 

வலிமையாக வாழ்ந்தால் நாம் குற்றமே செய்தாலும் தவறாகாது என்று நினைக்கும் வில்லன், அவனைக் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டுமானால் அவனை விட வலிமை…

Read More

வீரபாண்டியபுரம் திரைப்பட விமர்சனம்

by by Feb 19, 2022 0

‘வன்முறை என்பது இருபுறம் கூரான கத்தி, அது குத்தியவரையும் குத்தும்…’ என்பதை இன்னொரு முறை கத்திக் கத்தி அல்ல குத்திக் குத்தி, வெட்டி வெட்டி சொல்லி இருக்கிறார் சுசீந்திரன்.

 
படத்தில் சொல்லப்படும் வீரபாண்டியபுரம் கிராமத்திற்கும் பக்கத்து கிராமமான நெய்க்காரன் பட்டிக்கும் உள்ளூர பகை இருந்து வர, அதன் காரணமாக மாறி மாறி இரு தலைக்கட்டு குடும்பங்களும் வெட்டிக் கொண்டு சாகின்றன.
Read More

கூர்மன் திரைப்பட விமர்சனம்

by by Feb 11, 2022 0

அடுத்தவர் மனதை அறியும் வல்லமை படைத்த மெண்டலிஸ்ட் என்கிற பதத்துக்கு தமிழில் கூர்மன் என்ற பொருளைப் பிடித்து இந்தப் படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தின் கதையும் அதுதான். 

சென்னை பல்லாவரத்துக்கு அருகில் ஒதுக்குப் புறமாக பெரிய பரப்பளவில் ஆதரவின்றி இருக்கும் பழைய வீட்டில் வசிக்கிறார் நாயகன் ராஜாஜி. அவருடன் இருப்பவர்கள் அவரது பணியாளரான பால சரவணனும், ஆசையாக வளர்க்கும் நாய் சுப்புவும்தான். 

போலீசில் ஆய்வாளராக இருந்த அவர் வாழ்வில் அவர் காதலிக்கு நடந்த கொடுமையின் காரணமாக வேலையை விட்டு…

Read More

எப் ஐ ஆர் திரைப்பட விமர்சனம்

by by Feb 11, 2022 0

இந்து மதவாதிகளின் “ஜெய் ஸ்ரீராம்” முற்றுகைக்கு எதிராக இந்திய இஸ்லாம் மாணவி எழுப்பிய “அல்லாஹு அக்பர்…” முழக்கம் ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் எதிரோலித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பொருத்தமாக வெளியாகி இருக்கும் படம் இது. இந்திய முஸ்லிம்கள் அனைவரையுமே பயங்கரவாதிகள் போலப் பார்க்கும் பார்வைக்கு எதிராக முழக்கம் இடுகிறது இந்தப்படம்.

உலகை அச்சுறுத்தி வரும் ஐஸிஸ் அமைப்பு இந்தியாவில் குறிப்பாக சென்னையில் நடத்தவிருக்கும் பேரழிவை இந்திய முஸ்லிம் ஒருவர் எப்படித் தடுத்து நிறுத்துகிறார் என்கிற கதை. அதைத்…

Read More

கடைசி விவசாயி திரைப்பட விமர்சனம்

by by Feb 10, 2022 0

விவசாயத்தைக் காக்கவென்று அநேக படங்கள் சமீபத்தில் தமிழில் வரிசைக் கட்டியிருக்கின்றன. ஆனால் துருத்தலும், மிகையும் இன்றி அது குறித்த சரியான புரிதலுடன் எழுதப்பட்டு வந்திருக்கும் முதல் படம் இதுதான் எனலாம். விவசாயத்தின் மற்றும் விவசாயியின் வாழ்க்கை குறித்தும் சினிமாத்தனம் கலக்காமல், பிரசார நெடி இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்ட கடைசிப்படமாகவும் இது இருக்கக் கூடும்.

படத்தை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பவரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ என்று படத்தில் சுட்டிக் காட்டுவது கிட்டத்தட்ட வழிக்கொழியும் நிலையில்…

Read More

மகான் திரைப்பட விமர்சனம்

by by Feb 10, 2022 0

வழக்கமாக சீயான் விக்ரம் நடிக்கும் படங்கள் சினிமா ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும். இந்தப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் அவருடன் நடித்திருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இரு மடங்காகி இருக்கிறது.

கொள்கையில்லாமல் இஷ்டப்படி வாழ்வது எப்படி குற்றமோ அதேபோல் கொள்கையுடன் நடக்கிறேன் என்ற பெயரில் அடுத்தவர் நலன் கெட நடப்பதும் குற்றம் என்ற கருத்தை இதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

காந்தியவாதியான ஆடுகளம் நரேன் தன் மகன் விக்ரமுக்கு ‘காந்தி மகான்’ என்று பெயரிட்டு வளர்க்க அவரோ சிறு…

Read More