February 12, 2026
  • February 12, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

தர்மபிரபு வில் திமிராக நடித்தேன் – யோகிபாபு

by by May 4, 2019 0

யோகிபாபு நடிக்கும் ‘தர்ம பிரபு’ படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. அதில் யோகிபாபு பேசியதிலிருந்து…
 
“இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம்.
 
அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி…

Read More

ஹரீஷ் கல்யாண் நடனமாட ராசி நட்சத்திரங்களை வைத்து ஒரு பாடல்

by by May 3, 2019 0

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய ‘தனுசு ராசி நேயர்களே’ படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கருவை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படம் பிடித்திருக்கிறார்கள். 
 
இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, “தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம்.
 
இந்தப் படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர், அதன்…

Read More

தெலுங்கு மலையாள வாய்ப்புகள் வருகின்றன – தினேஷ் உற்சாகம்

by by May 2, 2019 0

‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார். 
 
அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் ‘குக்கூ’, ‘விசாரணை’ ஆகிய படங்கள் முக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  
 
அந்த…

Read More

அரவிந்த்சாமியுடன் இணையும் முரட்டு குத்து இயக்குனர்

by by May 2, 2019 0

‘ஹரஹர மகாதேவி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்ந்’ படங்களின் இயக்குநர் சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடக்டிவ் திரில்லர் படம், இன்னும் பெயரிடப்படாத நிலையில் இன்று தொடங்கப் பெற்றது.

நிகழ்வில் ஹீரோ அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பாளர் வி.மதியழகன், இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர்…

Read More

சாய்பல்லவி அடிக்கடி கேட்ட கேள்வி – சூர்யா

by by May 1, 2019 0

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபாலன் குமரன்’ (சுருக்கமாக என்ஜிகே) படத்தின் டிரைலர் வெளியீட்டில் சூர்யா பேசியதிலிருந்து…

“அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்துகொண்டிருந்ததால் இசையை முழுமையாகக் கேட்க முடியவில்லை.

செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து…

Read More

ஆர் கண்ணன் தயாரிப்பு இயக்கத்தில் சந்தானம்

by by May 1, 2019 0

இயக்குநராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஆர்.கண்ணன் தன் தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸு’க்காக இயக்கித் தயாரித்த படம் ‘இவன் தந்திரன்’.

கௌதம் கார்த்திக் ஹீரோவான இந்தப்பட வெற்றியைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்த படம் ‘பூமராங்’. அதர்வா முரளி நாயகனான இந்தப்படமும் வெற்றியடைய, இப்போது தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர்.

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படமாக அது அமைகிறது. ‘தில்லுக்கு துட்டு 2’ படத்துக்குப் பின் சந்தானம் நாயகனாகும் இந்தப்படம் அட்டகாசமான காமெடி கலாட்டாவான…

Read More

படப்பிடிப்பை நிறுத்தி பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்த இயக்குநர்

by by Apr 29, 2019 0

‘பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்’ & ‘ஜே.கே இண்டர்நேஷனல்’ இணைந்து தயாரிக்கும் ‘ஐ ஆர் 8’ படத்தில் அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாக நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.டி, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
 

கே.வி.மணி ஒளிப்பதிவு செய்ய, கோண்ஸ் பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார். 

 
அதில் ‘உழவன் இல்லாத உலகம் உனக்கு ஒரு பிடி சோறு எப்படி கிடைக்கும்’… ‘மண்ணுண்டு நீருண்டு விதையுண்டு மனிதா… மனம் கொண்டு உழைத்தாலே கிடைக்காத பலன் தான்…’ என்று வரும் இரண்டு…

Read More

10 நாள் காஞ்சனா 3 வசூல் 130 கோடி+வேதிகா டான்ஸ் வீடியோ

by by Apr 29, 2019 0

ராகவா லாரன்ஸ் நடிப்பு இயக்கத்தில் உருவான காஞ்சனா 3, ஏப்ரல் 19 ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
 
சரியாக கோடை விடுமுறையைக் குறிவைத்து வந்ததால் இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. முதலில் முடிவடைந்த 10 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 130 கோடிகளை அள்ளி குவித்திருக்கிறதாம்.
 
இன்னும் இதற்குப் போட்டியாக ஒரு படமும் வெளியாகாத நிலையில் இன்னும் பல…

Read More

கார்த்தி ஜோதிகா நடிக்கும் படம் கோவாவில் தொடக்கம்

by by Apr 29, 2019 0

‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.  

பெயரிடப்படாத (கார்த்தி/ஜோதிகா) இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 
இப்படத்தை த்ரிஷ்யம், பாபநாசம் படங்களால் புகழ் பெற்ற ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ரெமோ, ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ் ஆன்சன் பால் மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள்.

கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி….

Read More

இந்தி ரீமேக் காஞ்சனாவில் திருநங்கையாக அமிதாப்

by by Apr 28, 2019 0

தமிழில் காஞ்சனா மூன்று பாகங்களாக சக்கைபோடு போட்ட கதை தெரியும். அதில் காஞ்சனா முதல் பாகம் ரொம்பவே ஸ்பெஷல். அது போட்டுக் கொடுத்த அடித்தளத்தில்தான் அடுத்தடுத்த பாகங்களும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
முக்கியமாக சரத் அதில் ஏற்ற திருநங்கை பாத்திரம்.
 

அந்த…

Read More