April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • படப்பிடிப்பை நிறுத்தி பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்த இயக்குநர்
April 29, 2019

படப்பிடிப்பை நிறுத்தி பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்த இயக்குநர்

By 0 633 Views
‘பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்’ & ‘ஜே.கே இண்டர்நேஷனல்’ இணைந்து தயாரிக்கும் ‘ஐ ஆர் 8’ படத்தில் அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாக நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.டி, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
 

கே.வி.மணி ஒளிப்பதிவு செய்ய, கோண்ஸ் பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார். 

 
அதில் ‘உழவன் இல்லாத உலகம் உனக்கு ஒரு பிடி சோறு எப்படி கிடைக்கும்’… ‘மண்ணுண்டு நீருண்டு விதையுண்டு மனிதா… மனம் கொண்டு உழைத்தாலே கிடைக்காத பலன் தான்…’ என்று வரும் இரண்டு பாடல்கள் எல்லா மனங்களிலும் இதயங்களில் இடம் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளதாம்.
 
IR 8 Movie Still

IR 8 Movie Still

ஜெயக்குமார்.டி, ஆயிஷா, அக்மல் தயாரித்திருக்கும் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் என்.பி. இஸ்மாயில். ‘சிங்கமுகம்’, ‘சொல்ல மாட்டேன்’, ‘வாங்க வாங்க’ போன்ற படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கியுள்ள நான்காவது படம் இது.

 
படம் பற்றி அவர் கூறியது… “தன் நிலத்தில் விவசாயம் பண்ண முடியாமல் தவிக்கும் நிலையில் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாமல் பரிதவிக்க, பெற்ற பிள்ளைகளும் கை கொடுக்கவில்லை என்ற நிலையில் விவசாயத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாமல்  படித்த இளைஞர்களை முன்னிறுத்தி விவசாயத்தைக் காக்கும் ஒரு வீர விவசாயியின் கதை..!” என்கிறார் என்.பி.இஸ்மாயில்.
 
சேலம் அருகே உள்ள தீர்த்தமலை, வேட கட்டுமடுவு கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பள்ளி மாணவர்களும் தலைமை ஆசிரியரும் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கே வந்தனராம். திகைத்துப் போன இயக்குனர் “படப் படப்பிடிப்பினால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லையா?” என்ற அச்சத்தை தலைமை ஆசிரியரிடம் கேட்க, அவரோ “நம் வாழ்வாதாரமே விவசாயம்தான். அதற்காகவே படம் எடுக்கும் உங்களைப் பார்த்து வாழ்த்து சொல்ல வந்தோம் என்றதும் மனம் குளிர்ந்திருக்கிறார் இயக்குனர்.
 
“முடிந்தால் எங்கள் மாணவர்களுக்கு விவசாயம் பற்றி சொல்லிக் கொடுங்கள்..!” என்றார் தலைமை ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து விட்டு விடைபெற்றாராம் இயக்குனர்.
 
பழனி, சேலம், தர்மபுரி,அரூர் அருகே உள்ள தீர்த்தமலை, வேடகட்டுமடுவு ஆகிய ஊர்களில் தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.
 
ஐ ஆர் 8 படத்தின் இசை வெளியீடு ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது.
 
IR 8 Movie Audio Launch

IR 8 Movie Audio Launch