September 14, 2026
  • September 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தெலுங்கு மலையாள வாய்ப்புகள் வருகின்றன – தினேஷ் உற்சாகம்
May 2, 2019

தெலுங்கு மலையாள வாய்ப்புகள் வருகின்றன – தினேஷ் உற்சாகம்

By 0 1043 Views
‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார். 
 
அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் ‘குக்கூ’, ‘விசாரணை’ ஆகிய படங்கள் முக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  
 
அந்த வரிசையில்  தற்பொழுது  இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில்  ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 
 
“குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. அதேசமயம் ஜனரஞ்சகமான அனைவரும் ரசிக்கும்படியும் , குடும்பங்கள் ,இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். ஒரு லாரி ஓட்டுனரின் மன நிலையில் லாரி ஓட்டுனராக வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்.
 
அடுத்தடுத்து தமிழ் மற்றும்  மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிற மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்…” என்கிறார் தினேஷ்.