January 15, 2025
  • January 15, 2025
Breaking News
May 1, 2019

சாய்பல்லவி அடிக்கடி கேட்ட கேள்வி – சூர்யா

By 0 833 Views
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபாலன் குமரன்’ (சுருக்கமாக என்ஜிகே) படத்தின் டிரைலர் வெளியீட்டில் சூர்யா பேசியதிலிருந்து…

“அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்துகொண்டிருந்ததால் இசையை முழுமையாகக் கேட்க முடியவில்லை.

செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.

யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. காரில் பயணம் செய்யும் போது அவரின் பாடல் கேட்டு போனில் தொடர்புகொண்டு உன் கையைக் காட்டு முத்தமிடுகிறேன் என்று கூறியிருக்கிறேன். செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி அன்யோன்மான கணவன் மனைவி போல இருக்கும்.

சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் “நான் நன்றாக நடித்திருக்கிறேனா?” என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

எஸ்.ஆர்.பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்து கொடுத்தார்.

என்னுடைய பயணத்தில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை… அடுத்த படம் எடுக்கும்போதும் என்னை வைத்து எடுங்கள்..!”