June 15, 2026
  • June 15, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அரவிந்த்சாமியுடன் இணையும் முரட்டு குத்து இயக்குனர்
May 2, 2019

அரவிந்த்சாமியுடன் இணையும் முரட்டு குத்து இயக்குனர்

By 0 857 Views

‘ஹரஹர மகாதேவி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்ந்’ படங்களின் இயக்குநர் சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடக்டிவ் திரில்லர் படம், இன்னும் பெயரிடப்படாத நிலையில் இன்று தொடங்கப் பெற்றது.

நிகழ்வில் ஹீரோ அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பாளர் வி.மதியழகன், இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர் (எங்கேயும் எப்போதும்) சரவணன், ஹன்சிகா நடிக்கும் ‘மகா’ படத்தின் இயக்குநர் யு.ஆர். ஜமீல், இயக்குநர் ப்ரவின் காந்த், தயாரிப்பாளர்கள் ஸ்டுடியோ கிரீன் கே.இ ஞானவேல்ராஜா, சக்திவேல் பிலிம் பேக்டரி பி.சக்திவேலன், தங்கராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் ஒருசில கூட்டணி பற்றிய அறிவிப்பு வரும்போதே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். அப்படியான எதிர்பார்ப்பை முதல் அறிவிப்பிலே ஏற்படுத்தியுள்ளதாம் நடிகர் அரவிந்த்சாமி இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் கூட்டணி.

துப்பறியும் திரில்லர் சம்பந்தப்பட்ட இந்தக்கதையில் அரவிந்த்சாமி புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜுன் மாதம் துவங்க இருக்கிறார்கள்.

காட்சிகளுக்கான உணர்வை பின்னணி இசையிலும் பாடல்களிலும் கச்சிதமாக கொண்டு வரும் டி.இமான் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர். ‘பள்ளு’ ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் பொறுப்பை பிரசன்னா ஜிகே ஏற்றுள்ளார். இப்படத்திற்கு கதாநாயகி தேர்வும் பிற நடிகர்களின் தேடலும் நடைபெற்று வருகிறது.

வி.மதியழகன் இதுவரை தயாரித்த படங்களில் இந்தப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் படைப்பாக்கத்திலும் பிரமாண்ட படமாக உருவாக இருக்கிறது.