February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கார்த்தி ஜோதிகா நடிக்கும் படம் கோவாவில் தொடக்கம்
April 29, 2019

கார்த்தி ஜோதிகா நடிக்கும் படம் கோவாவில் தொடக்கம்

By 0 802 Views
‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.  

பெயரிடப்படாத (கார்த்தி/ஜோதிகா) இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 
இப்படத்தை த்ரிஷ்யம், பாபநாசம் படங்களால் புகழ் பெற்ற ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ரெமோ, ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ் ஆன்சன் பால் மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள்.

கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோபரில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.