August 9, 2026
  • August 9, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

அமலா பால் 2வது திருமணம் செய்து கொண்டாரா இல்லையா பரபரப்பு புகைப்படங்கள் கேலரி

by by Mar 20, 2020 0

‘தலைவா’ படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால்.

ஆனால், சில வருடங்களிலேயே அவரை டை வர்ஸ்  செய்துவிட்டு தொடர்ச்சியாக ஆடை மாதிரியான படங்களில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

பின்னர் சில  மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட “அது என் பெர்சனல் விஷயம்”…

Read More

அதர்வாவை மிரட்ட நந்தா… படப்பிடிப்பை மிரட்டிய கொரோனா

by by Mar 20, 2020 0

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இயக்குநர்கள் பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர்.

இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், படத்தில் இருக்கும் வில்லன் பாட்த்திரத்துக்கான நீண்ட தேடலில் இருந்தார் இயக்குநர். 

Read More

இரண்டாவது குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

by by Mar 19, 2020 0

இயக்குநர் பா.இரஞ்சித் இப்போது இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகி உள்ளார். 

ஏற்கனவே பா.இரஞ்சித் – அனிதா தம்பதிக்கு ‘மகிழினி’ என்ற பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அவர்களது இரண்டாவது குழந்தையாக அவரது மனைவி அனிதா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

தன் குழந்தைக்கு ‘மிளிரன்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார் பா.இரஞ்சித்.

இவர் இப்போது ஆர்யாவை வைத்து வடசென்னைக் கதையொன்றை படமாக்கி வருவது தெரிந்த விஷயம்..!

Read More

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோத அடுத்த அணியின் அலுவலகம் திறப்பு

by by Mar 19, 2020 0

உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின் படி 2020 மே மாதத்துக்குள் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்த வேண்டிய சூழலில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட அணி இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களுடன் போட்டியிடும் அணியாக இராம நாராயணன் முரளி என்கிற என்.ராமசாமியின் தலைமையில் உருவாகியிருக்கும் அணியின் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. 

அந்த அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் அப்போது அறிமுகப்படுத்தப் பட்டனர்…

நிறைமாத கர்ப்பிணி நடிகையை நடிக்க வைத்த கணவர் நடிகருக்கு கேள்வி

by by Mar 18, 2020 0

சின்னத்திரை நடிகை ‘ஆலியா மானசா’வைத் தெரியாதவர்கள் இருக்க முடியது. இவரும், விஜய் டிவியின் ’ராஜா ராணி’ சீரியலில் நடித்த ‘சஞ்சீவ் கார்த்திக்’கும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டதையும் டிவி ரசிகர்கள் அனைவரும் அறிந்திருக்கலாம்.

இப்போது ஆல்யா மானசா நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. கொரோனா பாதிப்புக்காக படப்பிடிப்புகள் கூட முடங்கிப்போன இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்  ஆல்யா மானசா…

Read More

தனுஷுக்காக தமிழுக்கு வரும் மலையாள எழுத்தாளர்கள்

by by Mar 18, 2020 0

இந்திய சினிமாவில் தமிழில் மட்டும்தான் இயக்குநர்களே தன் படக் கதையையும் எழுதும் கூத்து நடந்து வருகிறது – அல்லது காப்பியடித்த கதையை வைத்து இயக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஆனால், கதாசிரியருமாக இருந்த பாரதிராஜா போன்ற ஒரு சிலர் மட்டும்தான் எழுத்தாளர்களிடம் கதையை வாங்கி படம் இயக்கி சரித்திரம் படைத்தார்கள்.

கொஞ்ச காலம் முன்பு சுஜாதா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷணன், ஜெயமோகன் போன்றோர் வசனம் எழுதும் அளவுக்கு சினிமாவில் அறியப்பட்டார்கள். வெகு சமீபத்தில் ‘அசுரன்’ படம் பூமணியில் ‘வெக்கை’…

Read More

இந்தியன் 2 விபத்து விசாரணை இன்று ஷங்கரையும் நடித்துக் காட்ட சொல்வார்களா

by by Mar 18, 2020 0

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக 3 பேர் இறந்தது அனைவரையும் அதி₹சியை ஏற்படுத்தியது.
 
அடிக்கடி சினிமா விபத்துகள் ஏற்பட்டு வருவதால் இந்த விபத்து ஏற்பட்டதன் காரணத்தை அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஏற்கனவே கமலஹானிடம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் அந்த இடத்தில்…

Read More

நமீதாவை ஐட்டம் என்ற நபர் – கிழித்துத் தொங்கவிட்ட நமீதா

by by Mar 17, 2020 0

நடிகை நமீதாவிற்கு ரசிகர் ஒருவர் “ஹை… ஐட்டம்…” என்று ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.
 
அந்த ரசிகரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ” இவன் பெயர் தமிழ் செந்தமிழ். என்ற இவன் என்னுடைய இன்ஸ்டாகிராமில் “ஹாய் ஐட்டம்…” என்று மெசேஜ் செய்திருந்தான். கேட்டதற்கு தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்றும் கூறினான். அதன் பின் என்னுடைய ஆபாச படத்தை இணையதளத்தில்…

Read More

அய்யப்பனும் கோஷியும் மலையாள பட தமிழ் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கினார்

by by Mar 17, 2020 0

‘கடவுளின் தேசம்’ எனக் கூறப்படும் கேரள மண்ணின் சமீப கால திரைப்படங்கள், உலகம் முழுதும் கவனம் ஈர்த்து வருகின்றன. எளிய மக்களின் கதைகளை கலாச்சாரத்துடன், பலமான திரை மொழியில் கூறி வரும் மலையாள படங்கள் எல்லைகள் கடந்து, அனைத்து மக்களையும் கவர்ந்திழுத்து வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்”…

Read More

விஜய் சேதுபதி பேச்சை லந்து அடிக்கும் காயத்ரி ரகுராம்

by by Mar 16, 2020 0

நேற்று நடந்த மாஸ்டர் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி “கடவுளை காக்கும் மனிதர்களை மக்கள் எப்போதும் நம்பவேண்டாம். கடவுளை காக்கும் மனிதன் இன்னும் பிறக்கவில்லை.

தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸிற்காக கூட மனிதன் தான் உதவ வருவான். கடவுளல்ல. அதனால் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கடவுள் இருக்கின்றார். ஆனால் மதங்களை மட்டும் நம்பும் மனிதனாக…

Read More