March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • திரைப்பட நடிகர் கதை வசனகர்த்தா இயக்குனர் விசு காலமானார்
March 22, 2020

திரைப்பட நடிகர் கதை வசனகர்த்தா இயக்குனர் விசு காலமானார்

By 0 490 Views

நாடக மேடை தொடங்கி நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குனர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் விசு.

1945ஆம் ஆண்டு திருநெல்வேலி களக்காட்டில் பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன்.

நாடக மேடைகளில் புகழ்பெற்ற இவர் சினிமாவில் இயக்குநர் கே.பாலசந்தரிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் ‘தில்லு முல்லு’ அந்த படத்தில் வசனமும் எழுதிய இவர் டப்பிங்கும் செய்துள்ளார்.

மேலும் அவரே கதை வசனம் எழுதி எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சின்ன முதலீட்டில் பெரிய வெற்றி பெற்ற படம் இது.

பின் ‘கண்மணி பூங்கா’ என்ற படத்தில் இயக்குனாராக அறிமுகமானார். மேலும் ‘மணல் கயிறு’, ‘சிதம்பர ரகசியம்’, ‘புதிய சகாப்தம்’ போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் விசு.

இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் ‘தங்கமணி ரங்கமணி’. 72 வயதான விசு சீரியல்களில் நடித்ததோடு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். சன்டிவியில் ஒளிபரப்பான ‘அரட்டை அரங்கம்’ மூலம் சினிமாவை விட அதிகப் புகழ் பெற்றார் அவர்.

உமா என்ற மனைவியைக் கொண்ட விசுவிற்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர்.

பின்னாளில் வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்..!