March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அய்யப்பனும் கோஷியும் தமிழில் சரத்குமாரும் சசிகுமாரும்
March 22, 2020

அய்யப்பனும் கோஷியும் தமிழில் சரத்குமாரும் சசிகுமாரும்

By 0 517 Views

சமீபத்தில் நடிகர் ப்ரித்வி ராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. கேரள, தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியில் சந்தித்துக் கொள்ளும் இருவருக்கிடையே நடக்கும் ஈகோ உள்ளிட்ட சண்டையை மிகவும் வித்யாசமான கோணத்தில் காண்பிக்கும் இந்த திரைப்படத்திற்கு இருமாநிலத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருப்பது தெரிந்த விஷயம். அதில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. நிறைய ரசிகர்கள் விஜய் சேதுபதியும், தனுஷும் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்கள் சமூக வலைதளத்தில்.

ஆனால், தற்போது வெளிவந்த தகவலின் படி நடிகர் ப்ரித்விராஜின் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமாரும், பிஜு மேனனின் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நடிக்கவுள்ளார்களாம். சரத்குமார் இறுதியாக ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கண்டிப்பாக ஒரிஜினல் கதையில் இருந்து தமிழுக்காக மாறுதல் இருக்கும் என்று இப்போதே சொல்ல முடியும்…

இப்படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் இயக்குனர், இசையமைப்பாளர் விவரங்கல் விரைவில் அறிவிக்கப்படுமாம்.