April 25, 2024
  • April 25, 2024
Breaking News

Currently browsing அரசியல்

ஸ்டாலினை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார்

by by Sep 22, 2018 0

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தபோது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினார். அதிலிருந்து…

“சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. ஊழல் குறித்து பேச…

Read More

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

by by Sep 19, 2018 0

கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது இஸ்லாத்தில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இருந்தும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தெரிவிக்க, இம்மசோதா அப்படியே விடப்பட்டது..

கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும்…

Read More

அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி

by by Sep 15, 2018 0

அ.ம.மு.கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அ.தி.மு.க.வில் இணைய அவர் தூதுவிடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அதில்…

“இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு பொறுப்பாளர்கள் விலகி கொள்ள வேண்டும்.

அதேநேரம் அ.ம.மு.க. தோற்றால் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விடுகிறோம் என்று சவால் விட்டேன்….

Read More

இடைத்தேர்தல் 2 தொகுதிகளிலும் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது – டி.டி.வி தினகரன்

by by Sep 12, 2018 0

மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் இன்று பேசியதிலிருந்து –

ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முடியாது. அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது போல முதல் அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன.

இப்போது மின்துறை அமைச்சரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவர் மின்சாரத்துறைக்கு அமைச்சராக இல்லை. மின்வெட்டுத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டு,…

Read More

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்

by by Sep 7, 2018 0

அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி விமான நிலையத்தில் இன்று (07-09-2018) பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் பல தரப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதிலிருந்து…

குட்கா ஊழல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், “எங்களுக்கு மடியில் கனமில்லை… வழியில் பயமில்லை…” என்று கூறியிருக்கிறார். இது ஆரம்ப கட்ட விசாரணை என்பதால் அவர் ராஜினாமா செய்ய அவசியமில்லை.

மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை…

Read More

ஆட்சியாளர்களால் என்னை சமாளிக்க முடிகிறதா – டிடிவி தினகரன் கேள்வி

by by Sep 5, 2018 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசியதிலிருந்து…

“சசிகலாவை சந்தித்துப் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லையென்று வெளியான தகவல் வெறும் வதந்திதான். அதை யாரும் நம்ப வேண்டாம்.

சோபியாவின் கைது விவகாரம் தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் கருத்து ஏற்கத் தகுந்த வகையில் இல்லை. பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும். இந்த விவகாரத்தில்…

Read More

நீட் தேர்வு விவகாரம் – சி.பி.எஸ்.சி க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

by by Aug 30, 2018 0

நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை தொடர்ந்து விசாரித்தது.

இதற்கிடையே, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,…

Read More

போட்டியின்றி திமுக தலைவராகும் மு.க.ஸ்டாலின் – கனிமொழி வாழ்த்து

by by Aug 26, 2018 0

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தபடி இன்று நடைபெற்றது.

இதில் இதுவரை செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல,…

Read More

வாய்பாய் மறைவு – குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

by by Aug 16, 2018 0

உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் புகழுடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உடலுக்கு முதலில் வாஜ்பாய் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர்…

Read More

கலைஞரின் இறுதிச் சடங்குக்கு முதல்வர் வந்திருக்க வேண்டாமா – ரஜினி கேள்வி

by by Aug 13, 2018 0

நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று காமராஜர் அரங்கில் நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்கள் பங்கேற்று கலைஞர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கலைஞரின் நினைவுகளைப் பற்றி நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதிலிருந்து…

“திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை…

Read More