March 29, 2024
  • March 29, 2024
Breaking News
January 2, 2019

என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் மோடிக்கு இல்லை – ராகுல் காந்தி

By 0 778 Views

ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதிலிருந்து…

“ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என்று தொடர்ந்து கூறிவரும் காங்கிரஸ் ‘எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறது?’ என பாஜகவினர் கேட்கிறார்கள்.

இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்னர் பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி ரபேல் பேரம் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானது என்று தெரிவித்திருந்தார். 36 விமானங்களின் விலையான 58 ஆயிரம் கோடியை 36-ல் வகுத்துப் பார்த்தால் வரும் தொகைதான் 1600 கோடி ரூபாய்.

526 கோடி ரூபாயாக இருந்த ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் என்ன? உயர்த்தியவர்கள் யார்?

இதில் உண்மை நிலவரம் என்னவென்றால் ரபேல் போர் விமான பேரத்தில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்ததன் மூலம் இந்த நாட்டின் காவலாளி என்று கூறும் பிரதமர் மோடி திருடனாகி விட்டார்.

என்மீது தனிப்பட்ட வகையில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது என பிரதமர் ஒரு பேட்டியில் கூறுவதை நேற்று பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் எந்த உலகத்தில் வாழ்கிறார்? என்று எனக்கு புரியவில்லை.

இவ்விவகாரம் தொடர்பாக மோடியுடன் நேருக்குநேராக விவாதிக்க நான் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறேன். ஆனால், என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் அவருக்கு இல்லை.

ரபேல் பேரத்தில் ஊழலே நடக்கவில்லை. இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடுவோம்..!”