April 10, 2026
  • April 10, 2026

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

by on September 19, 2018 0

கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது இஸ்லாத்தில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. இருந்தும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தெரிவிக்க, இம்மசோதா அப்படியே விடப்பட்டது.. கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மத்திய அமைச்சரவையின் […]

Read More

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவியல் புனைகதையா..?

by on September 19, 2018 0

வசூல் ராஜாவாக மாறிய ‘சீமராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வந்துள்ளது. அந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. அந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கிறார். விஷாலை வைத்து மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ வெளியாகி வெற்றி பெற்றது தெரிந்த விஷயம்தான். இதற்கு இடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ஆர்.ரவிக்குமார் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருவதும் நாம் அறிந்த விஷயங்களே. இதற்கு அடுத்த […]

Read More

விஜய்யின் சர்கார் முதல் பாடல் 24 ல் வெளியீடு – சன் பிக்சர்ஸ்

by on September 19, 2018 0

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தின் கொண்டாட்டம் இன்றிலிருந்து தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே வரவிருக்கும் அறிவிப்புக்காகக் காத்திருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது. அதன்படி வரும் (செப்டம்பர்) 24ம் தேதி மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் […]

Read More

விஸ்வாசம் அஜித் புகைப்படங்கள் லீக்கானது

by on September 18, 2018 0

சத்யஜோதி பிலிம்ஸுக்காக சிவாவின் இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சியை சிவா படமாக்கி வருகிறார் எனத் தெரிகிறது. இந்த சண்டைக் காட்சிகளின் இரண்டு புகைப்படங்களை யாரோ எடுத்து சமூக வலைத் தளத்தில் லீக் ஆக்கிவிட, அந்தப் படங்கள் டிரெண்டாகி வருகின்றன. படத்தைப் பற்றி வெளியே எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கும் நிலையில் இந்தப் படங்கள் லீக்கானது எப்படி […]

Read More

75000 திருமணங்களுக்கு சமைத்த அறுசுவை அரசு நடராஜன் மறைந்தார்

by on September 18, 2018 0

திருமண விருந்துகள் என்றாலே தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் பெயர் பெற்றவர் ‘அறுசுவை அரசு’ என்று புகழப்பட்ட நடராஜன். தன் 90வது வயதில் அவர் நேற்று (17-09-2018) இயற்கை எய்தினார்.  1950ம் வருடம் திருமணங்களுக்கு சமையல் கான்ட்ராக்ட் எடுத்து கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை 75,000 திருணங்களுக்கு நடராஜன் விருந்து படைத்திருக்கிறார் என்பது வியப்பான செய்தியாக இருக்கிறது. முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி.கிரியின் மகள் திருமணத்துக்கு விருந்து படைத்தபோது கிரி அவர்களால் ‘அறுசுவை அரசு’ பட்டம் தரப்பட்டதாக […]

Read More

மீண்டும் பெயரைக் கெடுத்துக்கொள்ளத் தயாராகும் ஜி.வி.பிரகாஷ்

by on September 18, 2018 0

ஒரு துறையில் பரிமளிப்பதே ஆகப் பெரிய விஷயம் என்றிருக்க, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் ஆண்டுகொண்டிருந்த நிலையில் சிறிய வயதில் திரை இசைத்துறைக்குள் வந்து வெற்றி பெற்றவர் ஜி.வி.பிரகாஷ்.  பெரும்பாலும் அனைத்து பெரும் இயக்குநர்களுடனும் பணிபுரிந்த அவர், இசையில் பெற்ற வெற்றியையும் மீறி நடிகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது அரிய சாதனை என்றே கொள்ளலாம். ஆனால், அந்த வெற்றியில் ஒரு கரும்புள்ளி என்றால் அது ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ […]

Read More

500 படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு மரணம்

by on September 17, 2018 0

மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனியிடம் வகித்த குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு இன்று கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 68. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் சேர்த்து 500 படங்கள் நடித்து முடித்தவர் கேப்டன் ராஜு. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என அனைத்து தமிழ் முன்னணி நட்சத்திரங்களுடனும் திரையில் பங்கெடுத்திருக்கும் அவர் நடித்த தமிழ்ப்படங்களில் தர்மத்தின் தலைவன், சூர சம்ஹாரம், ஜீவா, பிரியங்கா, ஜல்லிக்கட்டு, தாய்நாடு, என் […]

Read More

டிவி நடிகை நிலானி காதலர் தற்கொலை – போலீஸ் புகார் எதிரொலி

by on September 17, 2018 0

சின்னத்திரை நடிகை நிலானிக்கும், சின்னத்திரையில் உதவி இயக்குநராக இருக்கும் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ள நிலையில் ஒரு தொலைக்காட்சி தொடருக்காக நிலானி நடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் பேச முற்பட இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்ற நடிகை நிலானி, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள […]

Read More
CLOSE
CLOSE