January 22, 2025
  • January 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய்யின் சர்கார் முதல் பாடல் 24 ல் வெளியீடு – சன் பிக்சர்ஸ்
September 19, 2018

விஜய்யின் சர்கார் முதல் பாடல் 24 ல் வெளியீடு – சன் பிக்சர்ஸ்

By 0 1047 Views

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தின் கொண்டாட்டம் இன்றிலிருந்து தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கட்டிருந்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே வரவிருக்கும் அறிவிப்புக்காகக் காத்திருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது.

Sarkar First Single Announcement

Sarkar First Single Announcement

அதன்படி வரும் (செப்டம்பர்) 24ம் தேதி மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த படம் என்பதாலும் ‘சர்கார்’ படத்தின் இசைக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ள நிலையில் முதல் பாடலைக் கேட்க ரசிகர்கள் இப்போதே காதுகளைத் தீட்டி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.