April 26, 2025
  • April 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவியல் புனைகதையா..?
September 19, 2018

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவியல் புனைகதையா..?

By 0 1153 Views

வசூல் ராஜாவாக மாறிய ‘சீமராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

அந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் ’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனமே தயாரிக்கிறது. அந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருக்கிறார். விஷாலை வைத்து மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ வெளியாகி வெற்றி பெற்றது தெரிந்த விஷயம்தான்.

இதற்கு இடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ஆர்.ரவிக்குமார் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருவதும் நாம் அறிந்த விஷயங்களே. இதற்கு அடுத்த படமாக மித்ரன் படம் இருக்கும்.

‘இரும்புத்திரை’ படத்தில் சமூகத்தை பாதிக்கும் ஆன்லைன் வங்கிக் கொள்ளையைப் பற்றி மித்ரன் விலாவாரியாக தோலுரித்திருந்த நிலையில் சிவா நடிக்கவிருக்கும் இந்தப் படமும் சமூகத்தை பாதிக்கக்கூடிய அறிவியல் விழிப்புணர்வுப் புனைகதையைக் கொண்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.