சத்யஜோதி பிலிம்ஸுக்காக சிவாவின் இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் அஜித் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சியை சிவா படமாக்கி வருகிறார் எனத் தெரிகிறது. இந்த சண்டைக் காட்சிகளின் இரண்டு புகைப்படங்களை யாரோ எடுத்து சமூக வலைத் தளத்தில் லீக் ஆக்கிவிட, அந்தப் படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
Viswasam Fight Scene Leaked
படத்தைப் பற்றி வெளியே எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கும் நிலையில் இந்தப் படங்கள் லீக்கானது எப்படி என்று விஸ்வாசம் படக்குழு ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
வெளியில் இருந்து யார் வந்து செஞ்சிருக்கப் போறாங்க..? எல்லாம் கூட இருக்கிறவங்க ‘செஞ்சது’தான்..!
அவ்ளோ ‘விஸ்வாசம்..!’