July 10, 2026
  • July 10, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

லாரா திரைப்பட விமர்சனம்

by on January 2, 2025 0

காக்கிச்சட்டையின் தீரம் சொல்லும் கதைகளும், புலன் விசாரணைக் கதைகளும் எந்தக் காலத்திலும் அலுப்புத் தட்டுவதே இல்லை. இந்த உண்மையைப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மணி மூர்த்தி, ஒரு கிரைம் த்ரில்லராக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். காரைக்கால் பகுதியில் நடக்கிற கதையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் பாறை இடுக்கில் கரை ஒதுங்குகிறது.  சில நாட்கள் கவனிக்கப்படாமல் இருந்திருப்பதால் அந்தப் பெண்ணின் முகத்தை மீன்கள் கடித்துக் குதறி அடையாளம் தெரியாமல் ஆகியிருக்கிறது. இன்னொரு பக்கம் தன்னுடைய மனைவியைக் […]

Read More

லிங்கேஷ், கஞ்சா கருப்பு நடிக்க பெண் இயக்குனரின் புதிய படம் விரைவில்…

by on January 2, 2025 0

Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.  திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை […]

Read More

பயாஸ்கோப் திரைப்பட விமர்சனம்

by on January 2, 2025 0

பிரம்மாண்ட அரங்குகளுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்குள் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்று சொல்வோம். ஆனால், இந்தப் பட இயக்குனர் ராச்குமார் சினிமாவை குடிசைத் தொழிலாகவே ஆக்கிவிட்டார். ஒரு மாமாங்கத்துக்கு முன்னால்… அதாவது 2011ல் இவர் அரும்பாடு பட்டுத் தயாரித்து இயக்கிய ‘ வெங்காயம் ‘ என்கிற படம் விமர்சன ரீதியாகப் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தினால் கவரப்பட்ட இயக்குனர் சேரன் அதை வெளியிட பெரு முயற்சி எடுத்தார்.  வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பல முனையில் இருந்தும் […]

Read More

கலன் திரைப்பட விமர்சனம்

by on January 1, 2025 0

வன்முறையை அடிநாதமாகக் கொண்ட படங்கள் என்றாலே ஒரு காலத்தில் மதுரையே களமாக இருந்தது. சமீப காலமாக வடசென்னை இந்தக் களத்தைப் பிடித்திருக்கிறது.  இதிலிருந்து சற்று வித்தியாசப்படுத்தி சிவகங்கையில் நடக்கும் ஒரு வன்முறைக் கலாச்சாரப் படத்தை நியாயத்துக்கும் அநியாயத்துக்குமான போராட்டக் களமாக வைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வீர முருகன். அத்துடன் அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய ஆபத்தாக விளங்கும் போதை கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற செய்தியையும் முன்மொழிகிறார் அவர்.  சிவகங்கையில் தன் தம்பி அப்புகுட்டி மற்றும் மகன் […]

Read More

MAX திரைப்பட விமர்சனம்

by on December 31, 2024 0

ஒரு அதிதி புதிரியான ஆக்சன் கதையை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த இயக்குனர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. நம்மையும் கவலைப்பட விட முடியாத அளவுக்கு அப்படி ஒரு ‘மாஸ் பேக்கேஜ்’ கொடுத்து இருக்கிறார். ஊரை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு போலீஸ் ஸ்டேஷன். அதற்கு பின்னால் எல்லாம் காடு. அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. இந்த போலீஸ் ஸ்டேஷன் என்பது சென்னையில் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.  அந்த போலீஸ் […]

Read More

ராஜா கிளி திரைப்பட விமர்சனம்

by on December 28, 2024 0

எப்போதுமே உண்மைக் கதைகளைத் தழுவி எடுக்கப்படும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் இந்த ராஜா கிளி படமும் அமைகிறது.  நாம் நன்கறிந்த பெரும் தொழிலதிபர், பெண்கள் மீது கொண்ட சபலத்தினால் எந்த அளவுக்கு சமுதாயத்தில் மதிப்பு இழந்து சிறைக்குச் சென்று பின்னர் உயிர் விட்டார் என்பதை அடி நாதமாக வைத்துக் கொண்டு அதில் பாதிக்கு மேல் கற்பனையைச் சேர்த்து ஒரு சுவாரசியமான கதையை நமக்கு தந்து இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான தம்பி […]

Read More

உலக கேரம் சாம்பியன்களை பாராட்டி கௌரவித்த வேலம்மாள் நெக்ஸஸ் குழு

by on December 27, 2024 0

வேலம்மாள் நெக்ஸஸ் குழு உலக கேரம் சாம்பியன்களை அவர்களின் சாதனைகளுக்காக பாராட்டுகிறது! சென்னை, டிசம்பர் 27, 2024: வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் Correspondent திரு.எம்.வி.எம்.வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, திருமதி.வி.மித்ரா, மற்றும் திருமதி.கே.நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். உலக அரங்கில் சாதனைகள். இன்று நடைபெற்ற பாராட்டு விழா, கேரம் விளையாட்டில் சாம்பியன்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. தங்களது சிறப்பான ஆட்டத்தால் தேசத்திற்குப் பெருமை சேர்த்த சாம்பியன்கள், வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தால் […]

Read More

ஸ்மைல் மேன் திரைப்பட விமர்சனம்

by on December 27, 2024 0

போர் தொழில் வெற்றிப் படத்துக்குப் பின் சீரியல் கில்லர்களைப் பின் தொடர்ந்து சரத்குமார் துப்பறியும் மூன்றாவது படம். ஷ்யாம் – பிரவீண் இயக்கியிருக்கிறார்கள். கோயம்புத்தூர்தான் கதைக்களம். சிபிசிஐடியில் சரத்குமார் பணியாற்றும் போது ஒரு சீரியல் கில்லர் பெரும் தலைவலியை உருவாக்குகிறான். கொல்பவர்களின் முகங்களில் வாயை மட்டும் கிழித்து, சிரிப்பது போல் வைத்து விடுவது அவனுடைய ஸ்டைல். ஒரு கட்டத்தில் அவன் கொல்லப்பட்டதாக அறிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் சரத்குமாரின் உயர் அதிகாரி சுரேஷ் மேனன். அவரும் கொல்லப்படுவதை […]

Read More

மழையில் நனைகிறேன் திரைப்படம் விமர்சனம்

by on December 27, 2024 0

கவித்துவமான தலைப்பை பார்த்த உடனேயே இது காதல் கதை தான் என்பது தெரிந்து விடும். அதனால் இதுவரை பார்த்த அத்தனை காதல் படங்களின் பாதிப்புகளும் இந்த படத்தில் இருப்பதை இயக்குனர் டி. சுரேஷ்குமாரால் தவிர்க்க முடியவில்லை.  நாயகன் அன்சன் பால் ஒரு கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளை. அதற்குரிய இலக்கணங்களோடு(!) அப்பாவின் தொழிலையும் கவனிக்காமல், கல்லூரிப் படிப்பையும் முடிக்காமல் நண்பர்களுடன் சுற்றித் திரிகிறார்.  ஒரு சுபயோக சுப தினத்தில் மழையில் நனையும் நாயகி ரெபா மோனிகா ஜானைப் பார்த்த […]

Read More

அலங்கு திரைப்பட விமர்சனம்

by on December 25, 2024 0

மன்னர்கள் காலத்திலிருந்து விண்வெளி சென்றது வரை நாய்களுக்கு இந்தப் பூவுலகில் தனி இடம் உண்டு. மனிதர்களுக்கு நாய்கள் உதவுவது காலம் காலமாக நடைபெறும் நிகழ்வு என்று இருக்க, இந்தப் படத்தில் அதற்கு மாற்றாக ஒரு நாயின் நல்வாழ்வுக்கு சில மனிதர்கள் எவ்வாறு உதவுகிறார்கள் என்று சொல்கிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல். தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலை கிராமத்தில் நடக்கிறது கதை. அங்குள்ள பழங்குடிகளில் பலர் மலையை விட்டுக் கீழே இறங்கி நடைமுறை வாழ்க்கைக்கு வந்து விட்டாலும் […]

Read More