June 15, 2026
  • June 15, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

130 கோடி பயனாளிகள் இருந்தும் நஷ்டமடையும் துறை விவசாயம் – இயக்குநர் ஆர்.கண்ணன்

by on August 4, 2018 0

ஒரு படத்தின் டிரைலரைப் பார்த்து இயக்குநரை மணிரத்னம் வாழ்த்தினார் என்றால் அது எப்பேர்ப்பட்ட வாழ்த்து. அந்த வாழ்த்துக்கு இலக்காக அமைந்தது மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’. ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் […]

Read More

கஜினிகாந்த் விமர்சனம்

by on August 4, 2018 0

ரஜினியின் தீவிர ரசிகரான ஆடுகளம் நரேன், ‘தர்மத்தின் தலைவன்’ ரிலீசன்று நிறைமாத மனைவியுடன் படம் பார்க்கப் போகிறார். தியேட்டரிலேயே வலி வந்து மனைவிக்கு பிரசவம் ஆக, அங்கே பிறந்த மகனுக்கு ரஜினிகாந்த் என்றே பெயர் வைக்கிறார். ஆனால், ரஜினிகாந்த் வளர வளர தர்மத்தின் தலைவன் ரஜினி போலவே ஞாபகமறதிப் பேராசிரியராக ஆகிவிட எதையும் ஒருமுறைக்குப் பலமுறை செய்ய நேர்வதால் அவரை கஜினிகாந்த் என்று கலாய்க்கிறார்கள். அந்த கஜினியின் காதல் வாழ்க்கை இந்த ஞாபகமறதியால் என்னென்ன அலைக்கழிப்புக்கு உள்ளாகிறது. […]

Read More

தாழிடப்பட்ட வீட்டுக்குள் அஜித் பட இயக்குநர் மர்ம மரணம்

by on August 2, 2018 0

அர்ஜுன் நடித்த ‘ஆயுத பூஜை’, அஜித் நடித்த ‘ரெட்டை ஜடை வயசு’ படங்களின் இயக்குநர் சிவக்குமார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் மர்மமான முறையில் தான் வசித்துவந்த வீட்டின் உள்புறம் தாழிடப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். மறைந்த இயக்குனர் சிவக்குமார் திருமணம் ஆகாதவர். தனித்து வசித்து வந்த நிலையில் மூன்று நாட்களாக இவர் வீட்டுக் கதவு திறக்கப்படாமலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையும் கண்ட எதிர் வீட்டினர் காவலதுறைக்குத் தகவல் அளித்திருக்கின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து […]

Read More

ஹீரோவுக்கே கதை சொல்லாத அறிமுக இயக்குநர்

by on August 2, 2018 0

இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’யும் , ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனரான ராஜ்குமார் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தின் நாயகனாக தினேஷும், அவரது ஜோடியாக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். மேலும் ராதாரவி, மயில் சாமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அரோல் கரோலி’ இசை அமைத்துள்ள ‘அண்ணனுக்கு ஜே’ படத்தில் விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் […]

Read More

அமையவிருப்பது பசுமை வழிச்சாலை அல்ல பசுமை அழிப்புச் சாலை – கொதிக்கும் இயக்குநர்

by on August 1, 2018 0

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார்.    அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜெயப்பிரகாஷ் இசையமைக்கிறார்.   இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு […]

Read More

முதல்வர் பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

by on July 31, 2018 0

சேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறை கூறி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து… “அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் […]

Read More

தெலங்கானாவில் அதிக விலை திரையரங்குகளுக்கு அபராதம், சிறைத் தண்டனை

by on July 30, 2018 0

இப்போதைய சினிமா ரசிகர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதே திரையரங்குக் கட்டணம்தான். டிக்கெட் கட்டணத்தைவிட கேன்டீன் பொருள்கள் திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதுதான் அநியாயயமாக இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை. ஆனால், இப்படி தாறுமாறான விலையில் தியேட்டர்களில் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்றால் அதற்கு அபராதம், சிறை தண்டனை […]

Read More