June 15, 2026
  • June 15, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

மக்கள் நலன், சமூக நீதிக்காக வாழ்வை அர்ப்பணித்த தலைவருக்கு அஞ்சலி – பிரதமர் மோடி

by on August 8, 2018 0

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜி மண்டபம் வந்தார். அப்போது கலைஞரின் துணைவியார் ராசாத்தி அம்மாள், மகன் மு.கஸ்டாலின், மகள் கனிமொழியை சந்தித்து ஆறுதல் கூறினார். கருணாநிதியின் மரணச் செய்தி வெளியான நேற்றே அவருக்குப் புகழாரம் சூட்டி தன் ட்விட்டர் பக்கம் மூலம் மோடி வெளியிட்ட இரங்கல் செய்திகளின் தொகுப்பு… “கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் […]

Read More

ஐந்து முறை தமிழக முதல்வர்… சமூக நீதிக்காகப் போராடியவர் கலைஞர் – முதல்வர் புகழாரம்

by on August 7, 2018 0

இன்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- “தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பள்ளிப் பருவத்தில் […]

Read More

கலைஞர் மறைந்தார் – ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு

by on August 7, 2018 0

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், இந்தியாவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்ந்லக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 11 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். அகில இந்திய அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கேரள ஆந்திரா, மாநில முதல்வர்கள், திரை […]

Read More

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

by on August 6, 2018 0

‘தமிழ்நாட்டில் எல்லோரும் வாழலாம். ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்…’ என்ற ஆரோக்கியமான சிந்தனையுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் யுரேகா. ஆனால், அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறாரா என்பதுதான் ஆகப்பெரிய கேள்வி. தன் போக்கில் போகக்கூடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘காளி’தான் ஹீரோ. அதன் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் அவரிடம் நகரைக் கலக்கும் ‘சைக்கோ’ ஒருவனைப் பிடிக்கும் பொறுப்பை போலீஸ் கமிஷனர் ஒப்படைக்கிறார். இவரே கோக்குமாக்கான ஆளாக இருக்க, அந்தப் பொறுப்பை அவர் நிறைவேற்றினாரா என்கிற கதை. காட்டாற்று […]

Read More

சுப்பிரமணிய சுவாமிக்காக ‘பொறுக்கிஸ்’ என்று டைட்டில் வைத்தேன் – அறிமுக இயக்குநர்

by on August 6, 2018 0

இப்போது தயாரிப்பிலிருக்கும் புதிய படம் ‘பொறுக்கிஸ்’. இப்படி ஒரு தலைப்பா என்று பதறிவிடாதீர்கள். அந்த தலைப்புக்குக் கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளதாம். ‘கேஎன்ஆர் மூவிஸ்’ சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் இது. ‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ் ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். ஒளிப்பதிவும் இவரே. படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடிக்க, ரவிவர்மா இசையமைத்துள்ளார். […]

Read More

எங்க காட்டுல மழை விமர்சனம்

by on August 5, 2018 0

சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்த மதுரைக்கார ஹீரோவுக்கும், அவரது நண்பருக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரும்பணம் கிடைக்க, அவர்கள் படும்பாடு என்ன, மற்றவர்களைப் படுத்தும் பாடு என்பதும் கதை. எந்த நோக்கத்துக்காக சென்னை வந்தார் என்றே சொல்லப்படாத ஹீரோவாக ஹீரோ மிதுன் மகேஸ்வரன். வழியில் பார்த்த ஒரு நபரையே நண்பராக்கிக் கொண்டு அவர் செய்யும் அலப்பறைகள் போதாதென்று ஒரு அழகான பெண்ணும் அவர் கண்ணில் சிக்கி காதலில் விழ… மனிதருக்கு மச்சம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பார்வைக்கு ஐடி […]

Read More

அடுத்து தாய்ப்பாலையும் மீட்டர் வச்சு அளந்து கொடுப்பாங்க – மன்சூர் அலிகான் ஆவேசம்

by on August 5, 2018 0

‘தெரு நாய்கள்’ படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய ‘ஐ கிரியேஷன்ஸ்’ படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது ‘படித்தவுடன் கிழித்து விடவும்’. ‘தெரு நாய்கள்’ படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான் தன் அதிரடிப் பேச்சால் மிரட்டினார். அதிலிருந்து… “பொதுவா, நான் எந்த சினிமா விழாவுக்குப் போனாலும் , அந்தப் படத்தை “ஆஹா, ஓஹோ அற்புதம்..!” அப்படின்னு […]

Read More