October 5, 2024
  • October 5, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அடுத்து தாய்ப்பாலையும் மீட்டர் வச்சு அளந்து கொடுப்பாங்க – மன்சூர் அலிகான் ஆவேசம்
August 5, 2018

அடுத்து தாய்ப்பாலையும் மீட்டர் வச்சு அளந்து கொடுப்பாங்க – மன்சூர் அலிகான் ஆவேசம்

By 0 992 Views

‘தெரு நாய்கள்’ படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய ‘ஐ கிரியேஷன்ஸ்’ படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது ‘படித்தவுடன் கிழித்து விடவும்’.

‘தெரு நாய்கள்’ படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான் தன் அதிரடிப் பேச்சால் மிரட்டினார். அதிலிருந்து…

“பொதுவா, நான் எந்த சினிமா விழாவுக்குப் போனாலும் , அந்தப் படத்தை “ஆஹா, ஓஹோ அற்புதம்..!” அப்படின்னு சும்மாங்காட்டியும் பாராட்டிப் பேச மாட்டேன். ஆனால், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மாதிரி ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ எனும் இப்பட டைட்டிலே ., இப்படக் குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது.

மோடி அரசு கொண்டு வந்த டிமானிடைசேஷனுக்கு முன்பு தமிழ் சினிமா, தென் இந்திய சினிமா நல்லா இருந்தது. டிமானிடைசேஷனுக்கு அப்புறம் 500 சிறுபட புரடியூசர் காணாமல் போயிட்டாங்க. அப்படித்தான் விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்கவுடாமல் பண்ணுது.

ஒரு படம்னாலே டீஸர், டிரைலர், ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு இந்தப் படத்துல இது இருக்கு… அது இருக்குன்னு சொல்லி ரசிகர்களை அழைக்கிறாம். ஆனா , திடீர்ன்னு எட்டு வழிச்சாலை போடுவோங்குது இந்த அரசாங்கம். 8 வழி யார் கேட்டா ? 8 வழிச்சாலைக்கு அவசியம் என்னன்னும் அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும் ? யாருக்கெல்லாம் பயன் அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல…?

இந்த அரசாங்கம் 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக 8 வழிச்சாலை போடத் துடிக்குது. கோவை சிறுவாணி தண்ணிய தனியாருக்கு விற்க பார்க்குது. காத்து, ஆக்ஸிஜன் விற்கப் போகுது. அடுத்து தாய்ப்பாலையும் மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்குத் தர முயற்சிக்கும். தமிழன் முழித்திருக்கும் போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப் பார்க்கிறது. தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது.

கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் ‘மேக் இன் இண்டியா’ திட்டம் என்கிறார்கள். சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இதுதான் மத்திய அரசின் ‘மேக் இன் இண்டியா’ திட்டமா ? பெரிய பெரிய நடிகன் பின்னாடி போனா இப்படித்தான். மத்திய அரசின் ‘பணம் செல்லாமை’ அறிவிப்புக்குப் பின் பலகோடி புது நோட்டுகள் எப்படி பல பணக்காரர்கள் கையில் கிடைத்தது..? இது என்ன நாடா..?

ஏன் இத்தனை எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தும் யாரும் பேச மறுக்கின்றனர் ..? எல்லாம் கமிஷன்தான் காரணம். கூடிய விரைவில் நாமெல்லாம் ஒன்று கூடி ‘நாம் தமிழர்’ன்னு ஆட்சி அமைப்போம் .

காந்தி, காமராஜர் எல்லாம் அன்று பிரிட்டிஷ்காரனை ஓடவிட்டார்கள். இன்று இவர்கள் கொரியா ஜப்பான்காரனை எல்லாம் கூவி கூவி அழைக்கின்றனர். இந்தப் படம் ‘படித்தவுடன் கிழி க்கவும்’ போல நாம் இந்த மாதிரி திட்டங்களைக் கிழிக்கவும், நாடு நாசம் ஆவதைத் தடுக்கவும் தயங்கக் கூடாது..!”

பட இயக்குனர் ஹரி உத்ரா –

“மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலம் பாதிப்பு குறித்து என் முதல் படமான ‘தெரு நாய்கள்’ படத்தில் சுட்டிக் காட்டினேன். அப்படம் பேசப் பட்ட அளவிற்குப் போகவில்லை. இந்த ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ ஹாரர் கதை என்றாலும் பேய் வழியாக இன்சூரன்ஸ் எனும் பெயரில் படித்த, படிக்காதவன் உள்ளிட்ட எல்லோரிடமும் நடக்கும் கொள்ளையை பேசி உள்ளேன். இப்படத்தின் வெற்றியை பொறுத்து நிச்சயம் மூன்றாவது படமும் எடுப்பேன்..!”