January 15, 2025
  • January 15, 2025
Breaking News
October 16, 2018

இந்த உலகம் பொறுக்கிகளுக்கு உகந்தது – லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதில்

By 0 1343 Views

‘மீ டூ’ பதிவுகள் வலுப்பெற்ற பிறகு பிரபல பெண் கவிஞரும், டாகுமென்டரி பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமீபத்தில் தனக்கு ஒரு இளம் இயக்குநரிடம் இருந்து 2005-ல் அவரது காரில் வைத்து பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாகவும், கத்தியைக் காட்டி அதிலிருந்து மீண்டதாகவும் பதிவிட்டிருந்தார்.

பிறகு அந்த இயக்குநர் சுசி கணேசன்தான் என்று கூற, வெகுண்டெழுந்த சுசி கணேசன் அந்தக் குற்றச்சாட்டுக்கு முகநூலில் கீழ்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.

“லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி , வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள்.

இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள்….உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே , ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும்

leena_manimekalai

leena_manimekalai

புதுமைப் பெண்ணான நீங்கள் , கத்தியை அந்த அப்பாவி( ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர். அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன்- என்னை கொச்சைப் படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன்.

இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை , உன்னைப் போன்ற .metoo-இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் ” சமுதாய வைரஸ்களை” களை களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.

Social media நண்பர்களுக்கு-தயவு செய்து metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு தவிறுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை.

குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில் , சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம் , வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்,”

இதற்கு லீனா மணிமேகலை பதிவிட்ட பதிலில், “சுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது. என் சொந்த வாழ்க்கை என் மனதிற்குகந்த மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. அதன் வெற்றி தோல்வியை அவர் எப்படி தீர்மானிக்க முடியும். கவிஞராக என் இடமென்ன என்று என் படைப்புகளும் இலக்கிய வாசக உலகமும் சொல்லும். சினிமாவில், அவர் எடுத்த படங்களை விட மிக நல்ல படங்களையே எடுத்திருக்கிறேன். என் படங்களில் பொறுக்கிகள் ஹீரோக்கள் அல்ல. மனசாட்சியை விற்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

சுசிகணேசனை சந்திக்கும்போதே நான் கவிஞர்,இயக்குனர். வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை. அவரைப் பற்றிய பதிவு போட்ட பிறகு நிறைய பத்திரிகையாளர்களும் பெண்களும் அவரைக் குறித்த இன்னும் அதிபயங்கர தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள். அவர்களுக்கு தங்கள் அனுபவங்களைப் பகிரங்கப் படுத்தும் தைரியம் வாய்க்கட்டும்,” என்று எழுதியிருக்கிறார்.

கவிஞரைத் தொடர்ந்து சுசி கணேசன் ‘மீ டூ’ விவகாரத்தில் உள்ளிழுக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.