September 24, 2026
  • September 24, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

பா.இரஞ்சித் இயக்கத்தில் பட்டையைக் கிளப்பும் மகிழ்ச்சி பாடல் வீடியோ

by on January 24, 2019 0

இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குவது தெரிந்த விஷயம்தானே..? சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்ததோடு அடுத்து தனது தயாரிப்பில் ‘குண்டு’ படத்தையும் தயாரித்து வருகிறார் . இந்நிலையில் தனது ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார். நடன இயக்குனர் ‘சாண்டி’யின் நடனத்தில் ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது, ‘மகிழ்ச்சி’ என்று துவங்கும் இந்த […]

Read More

37 சர்வதேச பட விழாக்களில் தேர்வாகி 12 விருதுகளைப் பெற்ற ஒற்றைப் பனைமரம்

by on January 24, 2019 0

‘நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்ட ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் இப்போது ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் எதிர்கொள்ளும் நிலையைக் கருவாக வைத்து உருவாகி இருக்கிறதாம். யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் […]

Read More

இந்தியாவின் முதல் தேசிய பெண்கள் கட்சி உதயம்

by on January 23, 2019 0

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருப்பதை உணர்ந்த மருத்துவர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஸ்வேதா ஷெட்டி, 36, ‘தேசிய பெண்கள் கட்சி (NWP)’ யைத் துவங்கி இனி வரும் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார். முழுவதும் பெண்களை மையப் படுத்தி, பெண்களுக்காகவே துவங்கப்பட்ட நாட்டின் முதல் தேசியக் கட்சியான ‘தேசிய பெண்கள் கட்சி’ கடந்த டிசம்பர் 18, 2018 – இல் புதுடெல்லியில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் தலைமைப் […]

Read More

இந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்‌ஷய்குமார்

by on January 22, 2019 0

அமோக வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது… ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்றுதானே கேட்கிறீர்கள். அவர் 2 பாய்ண்ட் ஓ வில்லன் அக்‌ஷய்குமார். அதில் பெரிதும் பேசப்பட்ட சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். ராகவா லாரன்ஸே இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார். மற்ற நட்சத்திரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப் பட உள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் […]

Read More

கன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்

by on January 22, 2019 0

கதாநாயகர்களைத் தேடும் திரையுலகில் ‘எனக்கு கதாநாயகிகள் மட்டும் போதும்’ என்று ‘ஹீரோயின் ஒரியன்டட்’ படங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குநர். த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலுதான் அவர். அடுத்து அவர் இயக்கவிருக்கும் படம் ‘கன்னித்தீவு’. இந்தப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்கும் நாயகி யார் என்கிறீர்களா..? தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமிதான் இப்படத்தின் கதைநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னித்தீவு என்று பெயர் வைத்துவிட்டு ஒரு கன்னிதானே இருக்கிறார் […]

Read More

உசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ

by on January 22, 2019 0

எண்ணி ஒரு வாரம் கூட ஆகவில்லை…. சிம்புவின் நல்ல எண்ணத்தைப் பாராட்டி. அதற்குள் அவர் மண்டைச் சூட்டுக்கு மத்தளம் அடித்து மதம் பிடிக்க வைத்துவிட்டார்கள்.  போனவாரம்தான் தேவையில்லாமல் பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அட்வைஸாக “என் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதீர்கள்…  அந்தக் காசுக்கு அப்பா அம்மாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள்…” என்று சொன்னார் சிம்பு. அகமகிழ்ந்தது சமுதாயம். அவ்வளவுதான்… அதகென்றே காட்துக்கிடந்த ஸ்டார்ஸின் ரசிகர்கள் என்ற கூட்டம் ‘அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா என்ன..? ஒண்ணு, ரெண்டு ரசிகர்களை வச்சுக்கிட்டு […]

Read More

எதிர்காலத்தில் திருமணம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன – வைரமுத்து

by on January 22, 2019 0

மீண்டும் எழுந்து வந்திருக்கும் இயக்குநர் சேரனின் ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ திரைப்படம் அவரது 11-வது படைப்பாகும். படத்தில் சேரனின் தங்கையாக நாயகி காவ்யா சுரேஷ் நடிக்க, மாப்பிள்ளையாக நாயகன் உமாபதி ராமையா நடித்துள்ளார். சேரனின் தாய் மாமனாக தம்பி ராமையா நடிக்க மாப்பிள்ளையின் அக்காவாக நடிகை சுகன்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, கார்த்திக் தங்கவேல், கோபி நயினார், நடிகைகள் […]

Read More

நயன்தாரா பேசிய வசனத்தில் தயாராகும் படம்

by on January 21, 2019 0

ஜித்தன் ரமேஷ் ஐந்து அறிமுக கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ‘ஒங்கள போடணும் சார்…’ இந்தத் தலைப்பை நினைவிருக்கிறதா..? ‘நானும் ரௌடிதான்’ படத்தில் வில்லன் பார்த்திபனைப் பார்த்து நயன்தாரா பேசிய வசனம் இது. இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், “நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்க, இந்த வாலிபர்களும் இளம்பெண்களும்  ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது […]

Read More