July 10, 2025
  • July 10, 2025
Breaking News
February 16, 2019

பலியான வீரரின் நண்பர் பேச்சைக் கேளுங்க – வீடியோ

By 0 1285 Views

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியானது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.

உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் புல்வாமா சம்பவம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துவரும் நிலையில் பலியான வீரரின் நண்பர் என்ற அடையாளத்துடன் காவலர் உடையில் ஒரு வீரர் பேசிய உருக்கமான வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

அவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை எனினும் அவர் பேசியிருக்கும் கருத்துகள் அவரது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அதில் இருக்கும் நியாயமும் அந்த வீடியோவை இங்கே பகிர வைக்கிறது. கீழே வீடியோ…