September 20, 2026
  • September 20, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

இந்தியாவின் விருப்பமான சூப்பர் ஹீரோ ஜூலை 30-அன்று பிரம்மாண்டமான மறுவருகைக்குத் தயாராகிவிட்டார்..!

by on June 18, 2026 0

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) டிரெய்லருடன் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறார் டாம் ஹாலண்ட்; இம்முறை சவால்கள் மிக அதிகம்..! நான்கு வருடக் காத்திருப்புக்குப் பிறகு, டாம் ஹாலண்டின் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மீண்டும் களமிறக்கும் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மிகுந்த ஆரவாரத்துடன் வெளியிடப்பட்ட இந்த டிரெய்லர், பீட்டர் பார்க்கரின் பயணத்தின் அடுத்த கட்டத்தை ரசிகர்கள் […]

Read More

நான் அதிக தமிழ்ப் படங்களில் நடிக்காவிட்டாலும் உங்கள் அன்பும் ஆதரவும் குறையவில்லை..! – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா

by on June 18, 2026 0

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!..! நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது. “This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா […]

Read More

மக்கள் தலைவா திரைப்பட விமர்சனம்

by on June 17, 2026 0

தலைப்பே சொல்லிவிடுகிறது இது எந்த வகைப்படமென்று. பொலிட்டிக்கல் சட்டையர் எனப்படும் அரசியல் நையாண்டிப் படம்தான் இது. கர்மவீரரை நினைவுபடுத்தும் தர்மராஜர் என்ற தமிழக முதல்வர், கல்வியறிவை உணவிட்டு ஊட்டிய நிகழ்வைச் சொல்லி, அவரது தொண்டராக இருக்கும் கோடீஸ்வரர் பச்சமுத்து பழனிமாணிக்கம் என்ற ராதாரவியை அறிமுகப்படுத்தித் தொடங்குகிறது படம். இன்னொரு பக்கம் உழைப்புக்கு வேலை கொடுக்காமல், பிழைப்பு நடத்தும் விதமாக மக்கள் பிரச்சினை தீர்க்கவென்று போராட்டம் நடத்தி அதன் மூலம்.சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார் தமிழ்க் […]

Read More

ஜூலை 2026-ல் திரைக்கு வருகிறது ‘லவ் ஓ லவ்!’

by on June 16, 2026 0

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்! ஜூலை 2026-ல் திரைக்கு வருகிறது பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’! காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த […]

Read More

தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன்..! டார்க் பட விழாவில் பா.ரஞ்சித்

by on June 16, 2026 0

*நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. #DarkTrailer: ‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், […]

Read More

நாள்பட்ட கணைய அழற்சி நோயாளிக்கு சிக்கலான ரோபோடிக் கணைய அறுவை சிகிச்சையை அப்போலோ மருத்துவமனை செய்து முடித்துள்ளது..!

by on June 16, 2026 0

தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதல் ரோபோடிக் ஃபிரேஸ் (Frey’s) அறுவை சிகிச்சை, குறைந்தபட்ச ஊடுருவும் (Minimally Invasive) தொழில்நுட்பத்தின் மூலம் சிக்கலான கணைய (Pancreatic) நோய்களை சிகிச்சையளிப்பதில் மருத்துவமனையின் மேம்பட்ட நிபுணத்துவத்தையும் தொழில்நுட்ப திறனையும் வெளிப்படுத்துகிறது. சென்னை, 16 ஜூன் 2026: தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நாள்பட்ட கால்சிஃபிக் (கால்சியம் படிந்த) கணைய அழற்சியால் பாதிக்கப்பட்ட 39 வயது நோயாளிக்கு தனது முதல் ரோபோடிக் ஃபிரேஸ் (Frey’s) செயல்முறையை வெற்றிகரமாகச் […]

Read More

Disclosure Day ஆங்கிலப் பட விமர்சனம்

by on June 16, 2026 0

ஹாலிவுட் படங்களில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களுக்கு தனி எதிர்பார்ப்பு உண்டு. அந்த வகையில் அவர் இயக்கத்தில்  வெளியாகியுள்ள டிஸ்குளோசர் டே திரைப்படம், வேற்றுகிரகவாசிகள் பற்றிய அரசாங்க ரகசியங்களை வெளிக்கொணரும் போராட்டத்தை மையமாகக் கொண்ட அறிவியல் புனைகதையாக அமைகிறது.   படத்தின் கதை இப்படி போகிறது. பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட வேற்று கிரகவாசிகள் பற்றிய அதிர்ச்சி உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த சைபர் பாதுகாப்பு நிபுணர் டேனியல் கெல்ல்னர் மற்றும் வானிலை அறிவிப்பாளர் மார்கரெட் ஃபேர்சைல்ட் ஆகியோர் முயல்கின்றனர்.  இவர்களின் […]

Read More

வள்ளுவன் திரைப்பட விமர்சனம்

by on June 16, 2026 0

சமூக விரோதிகளை வேட்டையாடும் அந்நியன் டைப் கதைதான். அந்நியனில் கருட புராணத்தைச் சொல்லி கயவர்களை பலி வாங்கியது போல் இதில் வள்ளுவர் சொன்ன குறளை வைத்து பழிவாங்குவதால் இந்தப் பட ஹீரோவும் வள்ளுவன் ஆகிறான். நாயகன் சேத்தன் சீனு அவர் பாட்டுக்கு குப்பத்தில் பாட்டு பாடுவதும், குத்து போடுவதும், உணவுகளை சப்ளை செய்பவருமாக வாழ்ந்து வருகிறார்.  இன்னொரு பக்கம் போலீசால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சில சமூக விரோதிகள் கொல்லப்படுகிறார்கள் அந்த கொலைகளில் எல்லாம் இருக்கும் ஒரு […]

Read More

இரண்டு அதிநவீன ‘இதயத்துடிப்பு புலநீக்க’ (PFA) சிகிச்சைகளை அறிமுகம் செய்திருக்கும் சென்னை காவேரி மருத்துவமனை

by on June 15, 2026 0

சென்னை, 15 ஜூன் 2026: நவீன உயர்தர சிகிச்சைகள் வழங்குவதில் தமிழ்நாட்டில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை-சென்னை, உலகிலேயே மிகவும் மேம்பட்ட இரண்டு இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான சிகிச்சையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக இது கருதப்படுகிறது.  இத்திட்ட அறிமுகத்தின் வழியாக, உலகின் மிக அதிநவீன பி.எஃப்.ஏ (PFA) தொழில்நுட்பங்களான ‘மெட்டிரானிக் பல்ஸ்செலக்ட்’™ ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையிலும், ‘பயோசென்ஸ் வெப்ஸ்டர் வேரிபல்ஸ்’™ வடபழனி காவேரி மருத்துவமனையிலும் […]

Read More

டபுள் ஆக்குபன்சி திரைப்பட விமர்சனம்

by on June 15, 2026 0

இந்த நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்பது போல் எத்தனையோ கதைகளை பார்த்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை எப்படி ஒருவரால் யோசிக்க முடியும் என்று தெரியவில்லை.  தெய்வ நம்பிக்கை அற்றவராக இருக்கும் போஸ் வெங்கட்டின் மனைவி வினோதினிக்கு உணர்வற்ற நிலையில் ஒரு குழந்தை பிறக்க, போஸ் வெங்கட் துணுக்குற்று தெய்வத்திடம் முறையிடுகிறார்.  பழிவாங்கும் நோக்குடன் (!) தெய்வமோ, அந்தக் குழந்தைக்கு உயிர் கொடுப்பதுடன் பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் அது வாழும் என்று […]

Read More