September 1, 2026
  • September 1, 2026
Breaking News
September 1, 2026

மதுபான கண்ணாடி பாட்டில்களைத் திரும்பப் பெறும் முன்னோடித் திட்டம்..!

By 0 10 Views

46,000-க்கும் அதிக பரிவர்த்தனைகள்; திரும்ப வழங்கப்பட்ட தொகை ரூ.25 லட்சம்..!

சென்னை மாநகரில் மேலும் இரண்டு புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிலையில், ஜூலை மாதத்திற்குப் பிறகு பாட்டில்கள் சேகரிப்பு 300% அதிகரித்துள்ளது; திரும்ப வழங்கப்பட்ட தொகையும் (ரீஃபண்டு) கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை 1 September 2026: இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை மாநகரில், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடைகளில் கண்ணாடி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் முன்னோடித்துவ அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மேலும் இரண்டு இடங்களுக்கு இது விரிவுபடுத்தப்பட்டது. ஆகஸ்ட் 24, 2026 நிலவரப்படி, வாடிக்கையாளர்கள் கண்ணாடி  பாட்டில்களைத் திரும்ப வழங்குவதற்கு ஏறக்குறைய 47,000 பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. மேலும், இதற்காக ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான தொகை டிஜிட்டல் பணம் செலுத்தல் முறையில் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. க்யூஆர் (QR) குறியீடு அடிப்படையிலான இத்தகைய திட்டங்கள், இந்தியாவில் அதிக அளவில் மதுபான விற்பனை நடைபெறும் இடங்களில் காலியான கண்ணாடி பாட்டில்களைத் திரும்பப் பெறும் முறையில் ஒரு பெரிய மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், QR குறியீடு ஒட்டப்பட்ட கண்ணாடி பாட்டில்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாகச் செலுத்துவார்கள். பின்னர், காலியான பாட்டிலை அதற்கான சிறப்பு கவுண்டரில் திருப்பித் தரும்போது, டிஜிட்டல் முறையில் அந்த முன்பணம் உடனடியாக அவர்களுக்குத் திருப்பியளிக்கப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் பாட்டில்கள், டாஸ்மாக் அங்கீகரித்துள்ள பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகளிடம் மறுசுழற்சிக்காக வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி செயலாக்கம் செய்வதற்கு முன்பாக, இந்த நடைமுறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பரிசோதித்து தடங்கல்களை களைவதே இந்த முன்னோடித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

முன்னோடித் திட்டத்தின் செயல்பாடு: ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 24, 2026 வரை (ஒட்டுமொத்த நிலவரம்)

ஜூலை மாத தொடக்கத்துடன் ஒப்பிடுகையில், இத்திட்டத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. பாட்டில்களைத் திரும்பப் பெறும் பரிவர்த்தனைகள் கிட்டத்தட்ட 575% அதிகரித்துள்ளன. வழங்கப்பட்ட டிஜிட்டல் முறையில் திரும்ப செலுத்தப்பட்ட பணம் நான்கு மடங்கிற்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், வெற்றிகரமாக ஸ்கேன் செய்யப்பட்ட QR பாட்டில்களின் எண்ணிக்கை 300%க்கும் மேல் வளர்ச்சியடைந்து 2.56 லட்சத்தை தாண்டியுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் கடைகளில் பாட்டில்களை வாடிக்கையாளர்கள் திரும்ப ஒப்படைக்கும் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட்u பாரில்   (மதுபான விடுதியில்) சப்ளையராகப் பணிபுரியும் முரளி ரத்தினம் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய மது பாட்டில்களைத் திரும்பக் கொடுத்து முன்பணத்தைப் பெறுவதற்காக டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த RVM (பாட்டில்களைத் திரும்பப் பெறும் இயந்திரம்) இயந்திரத்தை நான் பார்த்தேன். அந்த இயந்திரம் பாட்டிலைச் சரிபார்த்து உறுதிசெய்து ஏற்றுக்கொள்கிறது; பின்னர் அது நேரடியாக சேகரிப்புப் பைக்கு செல்கிறது. பாட்டிலைத் திரும்பக் கொடுத்தவுடன் வாடிக்கையாளருக்கு அவரது முன்பணம் உடனடியாக திரும்பக் கிடைத்துவிடுகிறது” என்றார்.

அதிக மது விற்பனை நடைபெறும் சில்லறை விற்பனை நிலையங்களில், பணியாளர்களை கொண்டு நேரடியாக கைப்பட காலி பாட்டில்களைச் சேகரிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பாட்டில் மறுசுழற்சி திட்டத்திற்கு இந்த முன்னோடித் திட்டம் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக, வரும் வாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்துக் கடைகளிலும் இதன் செயல்பாட்டை சிறப்பாக செயல்படும் கவுன்ட்டரின் செயல்திட்டத்திற்கு நிகரானதாக உயர்த்த தனி கவனம் செலுத்தப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செயல்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் நிலையில், இந்த முன்னோடித் திட்டத்தின் நிகழ்நிலை விவரங்கள் குறித்த புதிய தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.