April 19, 2025
  • April 19, 2025
Breaking News
June 21, 2018

சர்கார் முதல் பார்வை சர்ச்சைக்கு உள்ளாகுமா..?

By 0 1953 Views

நாளை (22-06-2018) விஜய்யின் பிறந்தநாளாக இருக்க, அவர் ரசிகர்களுக்கான அவரது பரிசாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 62வது படத்தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியான நேரம் முதலே வைரலாகிவிட்ட ‘சர்கார்’ படத்தலைப்பு ஒருபக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும், இன்னொரு பக்கம் இப்போதைய ட்ரெண்டான ‘ட்ரோல்’ செய்யப்பட்டும் வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்க, இந்த டீமுடன் பாடலாசிரியர் விவேக்கும் இணைந்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான்-விவேக் கூட்டணியில் உருவான ‘ஆளப்போறான் தமிழன்’ உலகமெல்லாம் கொண்டாடப்பட்ட நிலையில் ‘சர்காரி’ல் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்து கொண்டிருப்பதால அதைவிடப் பெரிய ஹிட் பாடலை இந்தக் கூட்டாணியிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

Sarkar explanation

Sarkar explanation

‘சர்காரி’ல் வைரல் ஆன விஷயங்களில் பாராட்டாக ஒரு ரசிகர் சர்கார் என்ற ஆங்கில எழுத்துகளில் ‘எஸ்’ என்பது சன் பிக்சர்ஸைக் குறிப்பது என்றும், அடுத்து வரும் ‘ஏஆர்’ எழுத்துகள் ஏஆர் முருகதாஸைக் குறிப்பதாகவும், கே என்ற எழுத்து சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனைக் குறிப்பதாகவும், கடைசியாக வரும் ஏஆர் ஏஆர் ரஹ்மானைக் குறிப்பதாகவும் மீம் உருவாக்கி இருப்பது ரசனைக்கு உகந்ததாக இருக்கிறது.

Vijay with cigarette

Vijay with cigarette

அதேபோல் அதன் எதிர்மறையாக விஜய் புகைப்பிடிப்பது போல் இருக்கும் காட்சியை சிலர் விமர்சித்திருக்கிறார்கள். ஏற்கனவே பல ஹீரோக்கள் அன்புமணி ராமதாஸின் ஆலோசனையை ஏற்று புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். அவர்களில் விஜய்யும் ஒருவர். அதைப் பற்றிய ஒரு மீம்ஸில் விஜய் இனி புகை பிடிக்க மாட்டேன் என்று கூறிய பேட்டியையும், இப்போது வெளியான முதல் பார்வையையும் போட்டு ‘சொன்னிங்களே, செஞ்சிங்களா..? என்று கேட்டிருக்கிறார் ஒரு சினிமா ரசிகை.

எதிர்பார்த்ததைப் போலவே அன்புமணி ராமதாஸும் விஜய் சிகரெட் பிடிக்கும் இந்தக் காட்சியை விமர்சனம் செய்து ட்வீட் போட… விஜய் ரசிக்ரகள் பதில் போட… பற்றிக்கொண்டிருக்கிறது ட்விட்டர்..!

இதுபற்றிய இருதரப்பு விவாதங்களை அனேகமாக நாளை எதிர்பார்க்கலாம்..!