March 22, 2025
  • March 22, 2025
Breaking News
October 24, 2019

மயில்சாமியின் மகனுக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்

By 0 844 Views
நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக அறிமுகமாகும் ‘அல்டி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:-
 
‘டத்தோ’ ராதாரவி பேசும்போது,
 
“சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டுகிறேன்.
 
சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்க பார்க்க தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன்.
 
சிறு படங்களுக்கு குறைந்தது 5 நாட்களாக திரையரங்கில் ஒளிபரப்ப வேண்டும். ஸ்ரீகாந்த் தேவா இசையில் ’வாஸ்கோட காமா’ பாடல் எல்லோரையும் ஆட்டம் போட வைக்கும். இயக்குநர் உசேனுக்கு எனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பேன். அன்பு மயில்சாமிக்கு உங்கள் தந்தை மயில்சாமி போல் நட்பை பாதுகாத்து நல்ல பண்புகளோடு இருக்க வேண்டும்..!” என்றார். 
 
Alti Audio Launch

Alti Audio Launch

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

 
“தாவணி கனவுகள்’ படத்தில் தான் மயில்சாமி அறிமுகமானார். முதல் படத்தில் 7 டேக் வாங்கி தான் நடித்தார். அப்படிப்பட்ட மயில்சாமியா இவர் என்று இன்று வியந்து பார்க்கிறேன். அவருடைய மகன்களுக்கு ஒன்று கூற விழைகிறேன். நீங்கள் நன்றாக நடிக்கிறீர்களோ இல்லையோ? உங்கள் அப்பா மயில்சாமி மாதிரி நல்ல குணங்களோடு இருக்க வேண்டும்.
 
டிரைலர் பார்க்கும்போது புதுமுக இயக்குநர் மாதிரி தெரியவில்லை. யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இயக்கியிருக்கிறார். ‘அல்டி’ என்றால் அல்டிமேட்டின் சுருக்கம் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்..!” என்றார்.
 
நடிகர் விஜய்சேதுபதி பேசும் போது,
 
“மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி, பல காட்சிகளில் வந்தாலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அதேபோல் பேச்சிலும், நடிப்பிலும் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டார். மிகப்பெரிய ஜாம்பாவான்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிவார்கள்.
 
மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு மயில்சாமியும் அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டு அன்பு மயில்சாமி வெற்றியடைய வேண்டும்..!” என்றார்.