August 10, 2022
  • August 10, 2022
Breaking News

Tag Archives

ஒரு இயக்குனரின் கனவு நனவான கதைதான் செஞ்சி

by on July 29, 2022 0

சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் ‘செஞ்சி’.  […]

Read More

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதையா – பாரதிராஜா பெருமிதம்

by on December 23, 2021 0

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். […]

Read More

36 வருடங்களுக்குப் பின் தயாராகும் முந்தானை முடிச்சு பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்

by on September 19, 2020 0

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஊர்வசி, தீபா, கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 36 வருடங்களுக்கு பின்னர் ரீமேக் செய்யப்பட இருப்பதாக […]

Read More

கே பாக்யராஜை மகன் சாந்தனு எடுத்த சுவையான பேட்டி – வீடியோ

by on June 22, 2020 0

’டேட் சன் பிரஸண்ட்ஸ்’ சார்பில், நடிகர் சாந்தனு, அவரின் தந்தையும் இயக்குநருமான கே.பாக்யராஜை, தந்தையர் தினத்தை முன்னிட்டு பேட்டி எடுத்தார். படிப்பதற்கு பேட்டி கீழே… படிக்கவேண்டாம் வீடியோ போதும் என்பவர்களுக்கு அந்த வீடியோ அதற்கும் கீழே… ‘’எல்லோரும் என்னிடம் கேட்பார்கள்… எவ்ளோ பெரிய டைரக்டர், உங்க அப்பா. அவர்கிட்ட என்ன பேசிக்குவீங்க?’ என்றுதான் கேட்பார்கள். உண்மையைச் சொல்லணும்னா… நானும் அப்பாவும் ரொம்பப் பேசிக்க மாட்டோம். எப்பவாவது சேர்ந்து சாப்பிட உக்கார்ந்தா, அப்போ, சினிமா பத்தி பேசிக்குவோம், அவ்ளோதான். […]

Read More

3 மணி நேரத்தில் 4 ரீல்களுக்கு இசை அமைத்த சாதனை – இசைஞானி பற்றி ஏவிஎம் சரவணன்

by on June 3, 2020 0

நியாயப்படி இன்றுதான் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். ஆனால் ஜூன் 3 ஆகிய இன்று தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என்பதால் தன் பிறந்த நாளை ஒரு நாள் முன்னதாக மாற்றிக்கொண்டார். ஆக இசைஞானியின் உண்மையான பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை முன்பொரு சமயம் ஏவிஎம் சரவணன் அவர்கள் சொன்னதிலிரந்து பகிர்ந்துள்ளோம்… “இயக்குனர் பாக்யராஜூடன், நாங்கள் இணைந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வெற்றிக்கு, மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தவர் இசைஞானி இளையராஜா. அவரது இசையில் […]

Read More

என் மனைவியைக் காப்பாற்றிய கன்னடர் – கே பாக்யராஜ் சொன்ன திடுக் தகவல்

by on March 9, 2020 0

எல்.சி. நீரஜா பிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா நடித்துள்ளனர். ஆதிப், ஹமரா, சி.வி, கு.கார்த்திக் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாஸ்கோ எடிட்டிங் செய்ய, சாய் பாரதி நடனம் அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், கே.பாக்யராஜ், கில்டு […]

Read More

கே பாக்யராஜ் பெண்களை அவமானப்படுத்துவது சரியா?

by on November 28, 2019 0

இரண்டு நாள்களுக்கு முன் கருத்துகளைப் பதிவு செய் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.பாக்யராஜ், “பெண்கள் இடம் கொடுக்காமல் ஆண்களால் தப்பு செய்ய முடியாது…” என்ற கருத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களுக்கும் குற்றத்தில் சம்பந்தம் என்று பேசினார். இதற்கு பல முனையிலிருந்தும் எதிர்ப்புகள் உருவாகி வரும் நிலையில் நடிகர் சங்க நாசர் அணி உறுப்பினரான பூச்சி முருகன் தன் வலைதள பக்கத்தில் கே.பாக்யராஜ் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அது வருமாறு… “அகில இந்திய அளவில் திரைக்கதை […]

Read More

மயில்சாமியின் மகனுக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்

by on October 24, 2019 0

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக அறிமுகமாகும் ‘அல்டி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:-   ‘டத்தோ’ ராதாரவி பேசும்போது,   “சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை […]

Read More