September 22, 2026
  • September 22, 2026
Breaking News

Tag Archives

என்ன விலை திரைப்பட விமர்சனம்

by on September 16, 2026 0

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். ஆனால், செய்யாத குற்றத்துக்கு பழி சுமத்தப்பட்டு உலகின் பார்வையில் குற்றவாளியாக செய்திகளில் அவமானப்பட்ட ஒருவர் பின்னர் நிரபராதி என்று தெரிந்தால் அந்த உண்மையை யாரும் பிரபலப் படுத்துவதில்லை. முன்னர் சாட்டப்பட்ட குற்றத்தைச் சுமந்தபடியேதான் அவர் வாழ நேர்கிறது. இழந்த அவரது மானத்துக்கு என்ன விலை என்ற நியாயமான கேள்வியை இந்தப் படத்தில் நீதித் துறையின் முன்னால் வைக்கிறார் இயக்குநர் சஞ்சீவ் பழூர். அதிலும் இது போன்ற அவமானங்களால்  […]

Read More

ரெய்டு திரைப்பட விமர்சனம்

by on November 15, 2023 0

நிஜ வாழ்க்கையில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பிரச்சனை இல்லாமல் வாழ முடியுமோ என்னவோ, ஆனால் சினிமாவில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் வாழவே முடியாது என்பதுதான் நிதர்சனம். அப்படி நேர்மையான போலீஸ் ஆக விக்ரம் பிரபு வாழ்ந்து தாதாக்களை சுளுக்கு எடுக்க… பதிலுக்கு அவர்கள் அவரது மனைவி ஸ்ரீ திவ்யாவைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். வில்லன்களைப் பழிதீர்க்க விக்ரம் பிரபு ரெய்டு எடுப்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஒரு ஆக்சன் ஹீரோவாக பரிமளிப்பது என்பது சாதாரண வேலை இல்லை. […]

Read More

ரெட் சாண்டல் திரைப்பட விமர்சனம்

by on September 10, 2023 0

கடின வேலைகளைச் செய்பவர்கள் “உயிரைக் கொடுத்து வேலை செய்கிறேன்..!” என்பார்கள். ஆனால், உண்மையிலேயே உயிரைக் கொடுத்து செய்யும் வேலைகள் சில இருக்கின்றன. அதில் ஒன்றுதான் செம்மரக் கடத்தல்.  திருப்பதிக் காடுகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்க அவற்றை கள்ளத்தனமாகக் கடத்த விரும்புபவர்கள், மரங்களை வெட்ட தமிழ்நாட்டில் இருந்து வறுமையில் உள்ளவர்களைப் பயன்படுத்துவதும் போலீஸ் வேட்டையில் அந்த அப்பாவிகள் இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தக் கதையை கண்ணீரும், ரத்தமுமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம். வட சென்னையில் […]

Read More

சாணி காயிதத்தில் பேர் வாங்கிய சாம் சி எஸ்

by on May 10, 2022 0

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. […]

Read More

சபாபதி திரைப்பட விமர்சனம்

by on November 20, 2021 0

சந்தானம் என்றாலே காமெடிக்கு கியாரண்டி. ஆனால், அதில் கொஞ்சம் எல்லை மீறிப் போய் கடந்த படத்தில் சிறப்புத் திறனாளியை நக்கல் பண்ணப்போய் நிறைய விமர்சனங்களைப் பெற்றார். அதற்கு பிராயச்சித்தமாக இந்தப்படத்தில் அவரே சிறப்புத் திறனா லிளி யாக வந்து காமெடியை தாண்டிய குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு சபா(ஷ்)பதி என்று முதலில் பாராட்டி விடலாம். பிறவியில் இருந்தே வாய் திக்குவதால் பல பிரச்சினைகளையும், அவமானங்களையும் சந்திக்கிறார் சபாபதி என்ற சந்தானம். அவருக்கு சிறிய வயதில் இருந்தே […]

Read More

எனிமி திரைப்பட விமர்சனம்

by on November 7, 2021 0

ஆல் இன் ஆல் தியேட்டர்கள் பிடித்த ‘அண்ணாத்த’ படத்தை எனிமியாக அறிவித்து அதன் மூலம் தீபாவளி ரேஸில் புகுந்த படம் இது. ஆனால், படம் தனக்குத் தானே எனிமியாகப் போனதை படம் பார்த்திராதவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.   இரண்டு ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள் என்றால் அந்த ஸ்கிரிப்ட் அத்தனை வலிமை பொருந்தியதாக இருக்க வேண்டும். ஆனால், தாங்கள் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் படங்களிலேயே நல்ல ஸ்கிரிப்டை இனம் காணத் தெரியாத விஷாலும், ஆர்யாவும்  சேர்ந்து நடிக்கும் […]

Read More