November 21, 2024
  • November 21, 2024
Breaking News
  • Home
  • பா.இரஞ்சித்

Tag Archives

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்

by on December 7, 2019 0

இந்த பூமிப்பந்து உருவாக எத்தனைக் கோடி கோடி ஆண்டுகள் ஆயினவோ… ஆனால், இந்தப் புவியை ஒருமுறை அல்ல பலமுறை முற்றிலும் அழிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை நாம் சேமித்து வைத்திருக்கிறோம். அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையேயான போர் என்பது அவரவர்களின் எல்லைக்குட்பட்ட தனிப்பட்ட பிரச்சினையாகவே கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால், ‘இல்லை…’ என்கிறார் இந்தப்பட இயக்குநர். ஒரு போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் அதன் பாதிப்புகளும் வான்வழியாக காற்றிலோ, மழையிலோ நீர் வழிக் கடலிலோ கலந்து அதன் ஆபத்துகள் நூற்றாண்டுகள் கடந்தும் […]

Read More

பா இரஞ்சித் பேச்சுக்கு கருணாஸ் பதில் அறிக்கை

by on June 13, 2019 0

சாதியே கூடாது என்று பல ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தில் பலர் உறக்க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிகொண்டு திரிகிறார் – பல பொய்யான வரலாற்றை தனக்கு சாதகமாக திரிக்கிறார், தலித்தியம் பேசுகிற இயக்குநர் இரஞ்சித்! இவர் போன்ற பல பிற்போக்கு வாதிகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி புகழடைவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். நாம் அவர்களுக்கெல்லாம் பாடம் நடத்தி நேரத்தை விரயம் செய்யக் கூடாததுதான்! ஆனால் தமிழரின் மாபெரும் அடையாளமான தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழனைக் கொச்சைப்படுத்தும் போது […]

Read More

சினிமாவில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் – பா.இரஞ்சித்

by on April 14, 2019 0

‘வர்ணாலயா சினி கிரியேசன்ஸ்’ சார்பாக ‘ராமச்சந்திரன்’, ‘பெவின்ஸ் பால்’ தயாரித்து இருக்கும் ‘பற’ படத்தை கீரா இயக்கியுள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசப்பட்டவை…   இயக்குநர் கீரா –   “இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும்போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்த ‘பற’ படத்தில் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் […]

Read More

ஒப்பாரியை முதல்முறையாக மேடையேற்றிய பா.இரஞ்சித்

by on March 12, 2019 0

தமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித்.   அந்த வகையில் சமீபத்தில் அவரின் “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைத்து நடத்திய “வானம் கலைத் திருவிழா” மூன்று நாள் நிகழ்வு பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.   அதன் தொடர்ச்சியாக “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” மற்றும் “ரூட்ஸ் 2” குழுவினர் ஒருங்கிணைத்த “ஒரு ஒப்பாரி ஷோ” நிகழ்ச்சி மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.   நிகழ்த்துக் கலைகளில் மிக முக்கியமானதாக […]

Read More

பா.இரஞ்சித் இயக்கத்தில் பட்டையைக் கிளப்பும் மகிழ்ச்சி பாடல் வீடியோ

by on January 24, 2019 0

இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்குவது தெரிந்த விஷயம்தானே..? சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி படமாகிய ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்ததோடு அடுத்து தனது தயாரிப்பில் ‘குண்டு’ படத்தையும் தயாரித்து வருகிறார் . இந்நிலையில் தனது ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார். நடன இயக்குனர் ‘சாண்டி’யின் நடனத்தில் ‘கேஸ்ட்லெஸ்’ இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது, ‘மகிழ்ச்சி’ என்று துவங்கும் இந்த […]

Read More

பா.இரஞ்சித் களமிறக்கும் இரண்டாவது குண்டு

by on December 8, 2018 0

இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு தன் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மாரி செல்வராஜ் இயக்கி வெளியான ‘பரியேறும் பெருமாள்’ வெற்றித் திரைப்படமாக அமைந்ததி ல் மட்டற்ற மகிழ்ச்சி. விமர்சகர்களும் கொண்டாடிய அந்தப் படத்தைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸின் இரண்டாவது படத்தைத் தயாரிக்கிறார் பா.இரஞ்சித். தலைப்பே மிரட்டலாக ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ‘அதியன் ஆதிரை’ என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக […]

Read More

வாசித்தால்தான் எழுத்துக்கு கற்பனை செய்ய முடியும் -கூகை நூலகத் திறப்பில் பா.இரஞ்சித்

by on October 5, 2018 0

இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் கூகை திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காக பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு அந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை ‘சாய்ரட்’ பட இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைக்க இயக்குனர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் […]

Read More

கடைசிவரை பா.ரஞ்சித் அண்ணா கூடவே இருப்பேன் – மாரி செல்வராஜ்

by on October 4, 2018 0

சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக ‘பரியேறும் பெருமள்’ படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா RK, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் […]

Read More

பரியேறும் பெருமாள் திரைப்பட விமர்சனம்

by on September 28, 2018 0

மின்விசிறிக் காற்றுக்கும், பதனம் செய்யப்பட்ட குளிருக்கும் பழக்கப்பட்டுவிட்ட நம் உடல் கூட ஜன்னலோரம் எப்போதோ வீசும் இயற்கைக் காற்று பட்டதும் சிலிர்க்கிறது அல்லவா..? வெள்ளித்திரையிலும் அதுபோன்ற ஒரு அனுபவம் எப்போதாவதுதான் நேரும். அப்படியான ஒரு சிலிர்ப்புதான் இந்தப்படம். ஆதிக்க மனிதர்களின் சுயநல வக்கிரத்தால் பின்தங்கிவிட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன், வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் கல்வி, காதல், தேடல், வழிகாட்டல் என்று வாழ்வின் சகல தேவைகளுக்கும் எப்படிப் போராட நேர்கிறது என்கிற ஒற்றைக் கோடுதான் கதையின் ஒற்றை வரியும். […]

Read More
  • 1
  • 2