ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான். அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக, […]
Read Moreகார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது.’கே19′ (K19) என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் […]
Read More‘தம்பி திரைக்களம்’ மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ […]
Read Moreலால்குடி கருப்பையா காந்தி என்ற பெயரின் சுருக்கம்தான் இந்த எல்கேஜி. அந்தப் பாத்திரத்தில் வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அரசியல் விமர்சகரான ‘சோ’ பாணியில் தற்கால அரசியலை நையாண்டியுடன் தூர் வாரி சுத்தப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்தப்படம். அரசியலுக்குள்ளேயே வாழ்ந்தும் தம்படி தேராமல் வாழ்வை சேதாரப்படுத்திக்கொண்ட தன் அப்பா போல் ஆகிவிடாமல் வெற்றிகரமாக அரசியல்வாதியாக மாற முடிவெடுத்து ஏரியா கவுன்சிலராகும் ஆர்ஜே பாலாஜி, அதே தகிடுதித்த வேலைகளால் எப்படி மாநில முதல்வர் வரை உயர்ந்தார் என்று சொல்லும் கதைதான் […]
Read Moreதமிழ் சினிமாவின் நவீன டிரெண்ட் செட்டர்களில் முக்கியமானவர் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’. வணிகத்துக்கு விலை போகாமல் சினிமாவின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் இவரது முதல் படமான ‘ஆரண்ய கண்டம்’ விமர்சகர்களால் பெருமளவு பாராட்டுகளைப் பெற்று இன்றைய நவீன படமாக்கலுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. அடுத்த இவரது படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு எட்டு வருடங்களுக்குப் பின் பதில் கிடைத்திருக்கிறது. அவர் இப்போது இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க முடிவானதுமே சினிமா […]
Read More