April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இசைக் கலைஞர்கள் சங்கத்திலிருந்து அனிருத் நீக்கமா..?
January 5, 2020

இசைக் கலைஞர்கள் சங்கத்திலிருந்து அனிருத் நீக்கமா..?

By 0 680 Views

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் பாரம்பரியம் மிக்கது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 1200 பேர் உறுப்பினர்களாக இருக்கும் இந்தச் சங்கத்தில் இசையமைப்பளர் அனிருத்தும் உறுப்பினராக இருக்கிறார். 

அவரை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க, இசைக்கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறதாம். ஏ…? என்ன செய்தார் அனிருத்..? சங்கத் தலைவரும், இசையமைப்பாளருமான தினா பதில் சொன்னார்.

“ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்துக்கு இசையமைக்கும் அனிருத் பின்னணி இசைச் சேர்ப்புக்கு இங்கே உள்ள இசைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. வெளிநாட்டு இசைக் கலைஞர்களுக்கே வேலை கொடுக்கிறார். இதை கடந்த 45 நாட்களுக்கு முன்பு அனிருத்தின் கவனத்துக்குக் கொண்டு போனோம்.

அதற்கு, “நான் பார்க்கிறேன்” என்று மட்டும் அனிருத் கூறினார். அதன் பிறகும் அவர் இங்குள்ள இசைக் கலைஞர்களை பயன்படுத்தவில்லை. அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினோம். அதற்கும் அனிருத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்நிலையில் ‘தர்பார்’ படத்தின் பின்னணி இசைச் சேர்ப்புப் பணி 3 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் தொடங்கியது. அதில் கண் துடைப்புப் போல் இங்குள்ள கலைஞர்கள் 5 பேர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், வெளிநாட்டுக் கலைஞர்கள் 50 பேர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கு, “முடியலை…சாரி” என்று மட்டும் அனிருத் கூறினார்.

அனிருத்தின் இந்த பொறுப்பற்ற பதில்கள், சங்கத்தை அவமதித்ததாக கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க செயற்குழுக் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி, சங்க சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாத அனிருத்தை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது பற்றி ஆலோசித்து வருகிறோம்..!”