July 27, 2026
  • July 27, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 8, 2018

3-வது முனையமானது தாம்பரம் ரயில் நிலையம் – நெல்லைக்கு புதிய ரயில்

0 1388 Views

சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் சென்னையில் இருக்க, மூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் மாற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 49 கோடி ரூபாய் செலவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் இன்று தாம்பரத்தில் மூன்றாவது முனையம் தொடங்கப்பட்டது.   இந்த முனையத்தை மத்திய ரயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு செல்லும் ‘அந்த்யோதயா’  ரயிலையும் அவரே கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் முழுவதும் […]

Read More
June 7, 2018

காலா திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

0 1550 Views

31 வருடங்களுக்கு முன் கமல் நடித்து வெளியான ‘நாயகன்’ படத்தை நினைவுபடுத்தும் படம். அதில் எப்படி மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த வேலு நாயக்கர் அந்தப் பகுதி மக்களுக்கான வாழ்விடத்தைத் தக்கவைக்கவும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் போராடி மாண்டாரோ அதே தேவைகளுக்காக இதில் தாராவியிலிருக்கும் அடித்தட்டு மக்களின் அறிவிக்கப்படாத தலைவராக இருக்கும் திருநெல்வேலித் தமிழரான ‘காலா’ என்கிற கரிகாலன் போராடி மாளும் கதை. தாராவி குடியிருப்பை காலி செய்து கட்டடம் கட்ட ஆதிக்க சக்தி படைத்த […]

Read More
June 6, 2018

சிம்பு சீறிப் பாயவிருக்கும் அடுத்த சீசன்

0 1341 Views

‘சிம்பு’ என்றாலே ‘வம்பு’ என்பதுதான் சினிமாவைப் பொறுத்தவரை. ஆனாலும் அவருக்கான ரொட்டி சினிமாவிலிருந்து வெதுப்பி வைத்ததாகவே தோன்றுகிறது. ஷூட்டிங்குக்கு வர மறுக்கிறார், படத்தை முடித்துக் கொடுக்க மறுக்கிறார் என்று ஆயிரம் புகார்கள் எழுந்தாலும் அவரது படங்கள் வரிசைக் கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்போது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ புக்கானாலும் ஆனது, அவரது அடுத்த சீசன் அற்புதமாக லைன் கட்டி நிற்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் டப்பிங்க் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்க, அதை முடிக்கும் சிம்பு அடுத்து […]

Read More
June 5, 2018

காலா கட்டணக் கொள்ளையை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது – அன்புமணி ராமதாஸ்

0 1322 Views

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை…   நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு  ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.   தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப் […]

Read More
June 5, 2018

நீட் 2018 தேர்வு முடிவால் இருவர் தற்கொலை

0 1215 Views

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் வந்துவிட்டாலே உயிர்ப்பலி கேட்பது வழக்கமாகி விட்ட நிலையில் நீட்டின் தேர்வு முடிவுகளும் உயிர்களை பலி வாங்க ஆரம்பித்துவிட்டன. 2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தோல்வியடைந்த தமிழ்நாடு விழுப்புரத்தைச் சேர்ந்த எச்.ப்ரதீபா மனம் விரக்தியடைந்து எலிக்கு வைக்கும் விஷத்தை அருந்தி உயிர்விட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் 12ம்வகுப்பில் 1200 க்கு 1125 […]

Read More
June 5, 2018

கமலின் கட்டிப்பிடி வைத்தியம் காவிரி நீரைத் தராது – அமைச்சர் ஜெயக்குமார்

0 1341 Views

“கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், , ஆலையை மூடும் முழு உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது..!” என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் இனி மீண்டும் அந்த ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளிக்கையில்… “கொள்கை முடிவுகளின் அடிப்படியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாற்ற முடியாது […]

Read More