July 15, 2025
  • July 15, 2025
Breaking News
July 27, 2018

அப்துல் கலாம் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் – டிடிவி தினகரன்

By 0 1077 Views

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் சென்றார்.

அங்கு அப்துல்கலாமின் அண்ணன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த தினகரன் அங்கு ஊடகங்களிடம் பேசியதிலிருந்து…

“அப்துல்கலாம் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவரது நினைவிடத்தில் தேசிய அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அவரது இந்த நினைவு நாளில் மாணவர்கள் இந்தியாவை வல்லரசாக்குவோம் என உறுதியேற்க வேண்டும்.

18 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நிச்சயமாக நியாயமான தீர்ப்பு வரும். அப்போது தமிழக அரசு கவிழும். அப்போது அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும்..!”