July 18, 2025
  • July 18, 2025
Breaking News
July 26, 2018

கோலமாவு கோகிலா வெளியீடு பற்றி இயக்குநர் நெல்சன்

By 0 1590 Views

ஒரு ஹீரோவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ஒரு ஹீரோயினுக்கு இல்லாத தமிழ்ப்பட உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ‘ஒன் அன்ட் ஒன்லி’ நயன்தாரா மட்டுமே.

இன்றைக்கு ஒரு ஹீரோ படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படி நயன்தாரா முதன்மைப் பாத்திரமேற்கும் ‘கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டை ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா வர்த்தகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Kolamavu Kokila

Kolamavu Kokila

ஆகஸ்ட் 17ஆம் தேதி பட வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, தனது முடிவில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. இயக்குனர் நெல்சன் கூறும்போது, “தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ மிகப்பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் மகத்தானவை.

மேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றி பெறும் ரகசியம் ‘சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது’. லைக்காவிற்கு இவை மிகவும் பொருத்தமானவை. லைக்கா புரொடக்‌ஷன்ஸ், கோலமாவு கோகிலாவை தங்களது சிறப்பான விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது..!” என்கிறார்.

அனிருத் ரவிச்சந்தரின் மாயாஜால இசை படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி விட்டிருக்கிறது. குறிப்பாக, ‘கபிஸ்கபா’ என்ற விளம்பர ஜிப்பரிஷ் பாடல், படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது.

கோலமாவு விற்கும் இடங்களில் கூட கோகிலாவின் புகழை நயன்தாரா மட்டுமே ஏற்படுத்த முடியும்..!