அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா […]
Read Moreஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்திக்கார பையனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடி திருமணம் செய்தவுடன், அவன் காணாமல் போக, அவனை தேடும் கதைதான் “ரவாளி”. கதாநாயகன் கதைப்படி, தமிழ் நாட்டில் வாழும் இந்திக்கார பையன் என்பதால், இயக்குனர் ரவி ராகுல், கதாநாயகன் ஆர்.சித்தார்த்க்கு நடிப்போடு, தமிழும் கற்றுக் […]
Read Moreமகன் தந்தைக்காற்றும் உதவியை பறைசாற்றும் படம். காவல்துறையிலிருந்த தந்தை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை அதே காவல்துறைக்குள் வந்து மகன் தீர்த்து வைக்கும் கதை. காவல்துறை என்றால் இதுவரை போலீஸ் கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர், இன்ஸ்பெக்டர், ஏட்டு என்று தான் நாம் சினிமா வாயிலாகத் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அதே காவல்துறைக்குள் தவறு செய்யும் காவலர்களைக் கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது என்ற உண்மையை இந்தப் படத்தின் மூலம் நம் முன்வைக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். அப்படி […]
Read Moreநலிந்து வரும் நாடகத்துறையில் கோமாளியாக இருக்கிறார் நாயகன் வைபவ். நாடகங்கள் குறைந்து வருவதால் இதிலிருந்து முன்னேற முடியாது என்று வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு அதற்கு பணம் சேர்ப்பதற்காக ஒரு இடத்தில் டிரைவர் பணியில் சேர்கிறார். உப்பை ஏற்றி வரும் அவரது வண்டிக்குள் போதை மருந்து இருக்க போலீசில் வகையாக சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து தப்பித்து குற்றத்துக்கு மேல் குற்றமாக செய்து கொண்டிருப்பவர் கடைசியில் என்ன ஆனார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஒரு ஆக்ஷன் கதைக்கு நாயகனாக […]
Read More“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே ..” என்ற ஒரு முதுமொழி இருக்கிறது. ஆக ரெண்டகம் என்றால் துரோகம் என்று அர்த்தம். யார், யாருக்கு எப்படி துரோகம் செய்தார்கள் என்பது தான் இந்தப் படத்தின் கதை. காதலி ஈஷா ரெப்பாவுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையைத் தொடங்கும் ஆசையில் இருக்கும் குஞ்சாக்கோ போபன் அதற்கான பணம் ஈட்ட ஒரு அசைன்மெண்ட்டை மேற்கொள்கிறார். அதன்படி ‘அசைனர் ‘ என்கிற மும்பை தாதா, கடத்தல் தங்கத்தை எடுத்துக்கொண்டு வரும் வழியில் நடந்த தாக்குதலில் […]
Read Moreஒரே ஷாட்டில் இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படத்தை சொல்வது என்பது அசுர சாதனை. அதில் ஒரு பிளாஷ்பேக்கும் அமைந்திருக்கிறது. பார்த்திபன் ஏற்கனவே நான் லீனியரில் இப்படி ஒரே ஷாட்டில் படம் எடுத்திருந்தாலும் கிட்டத்தட்ட அதே சீசனில் ஆரம்பிக்கப்பட்ட படம் இது என்பதால் இதுவும் ஒரு அரிய முயற்சி என்று சொல்ல முடியும். இந்த சாதனையை சிறு குறைகள் இருந்தாலும் வெற்றிகரமாகக் கடந்து முடித்திருக்கிறார் இயக்குநர் அஜு கிழுமலா. ஒரு சிற்றூரில் காவல்நிலையத்தில் ஒருநாள் இரவு சில […]
Read Moreபன்னாட்டு தயாரிப்பான கார் ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியுடன் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து அதன் சுவடுகளே இல்லாமல் கட்டிட தொழிலாளியான கருணாஸ் தன் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்து குழந்தை பெற்ற தன் மனைவி ரித்திகாவை மருத்துவமனையில் இருந்து காணவில்லை என்று புகார் செய்கிறார். அவர் கிடைத்தாரா என்பதுதான் மீதி கதை. கருணாசுக்கு இந்தப்படம் பல விருதுகளைப் பெற்றுத் தரும். என்ன ஒரு அற்புதமான நடிப்பு..? அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கும் அவரைக் கைக்குழந்தையைப் பிடுங்கி விட்டு இன்ஸ்பெக்டர் பாகுபலி […]
Read More