பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S.அகோரத்தின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது விஜய் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘விஜய் 63’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா ஜோடி சேரவுள்ளார்.
Vijay 63 Nayanthara Announcement
தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளும் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, ஒரு இடைவெளிக்குப் பின் ஒரு பெரிய ஹீரோவுடன் ஜோடி சேர்ந்து வழக்கமான ஹீரோயினாக நடிக்க ஒத்துக்கொண்டிருப்பது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த அளவுக்கு படத்தில் அவரது கேரக்டர் அமைக்கப்பட்டிருப்பதாகவும் நம்ப வாய்ப்பிருக்கிறது.
ஏற்கனவே விஜய் நடித்த படங்களிலேயே இது பிரமாண்டப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நயன்தாராவின் வரவு, ‘விஜய் 63’ படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.