June 30, 2025
  • June 30, 2025
Breaking News
September 11, 2021

சிம்புவின் மாநாடு தீபாவளி வெளியீடு

By 0 468 Views

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், உதயா, டேனி, மனோஜ் K பாரதி, பிரேம்ஜி, மஹத் ராகவேந்திரா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவைக் கையாள, சண்டைப் பயிற்சி அமைத்துள்ளார் ஸ்டண்ட் சில்வா. கலையை உமேஷ் குமார் கவனித்துள்ளார். சுப்பிரமணியம் தயாரிப்பு மேற்பார்வை செய்துள்ளார்.

அரசியல் பின்னணியில் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த நிலையில் மாநாடு படமானது வரும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக வரும் நவ-4ஆம் தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

தீபாவளிக்கு மாநாடு படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திரையுலகிலும் ரசிகர்களிடமும் ஒருசேர ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவின் மாநாடு படம் வெளியாவது தீபாவளி பண்டிகையை இன்னும் களைகட்ட செய்யவிருக்கிறது.