April 19, 2025
  • April 19, 2025
Breaking News
January 15, 2019

15 லட்சம் பார்வை கடந்த கடாரம் கொண்டான் டீஸர்

By 0 1075 Views

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்துக்கு அறிவித்த நாள் முதலே இரு பெரும் நடிகர்கள் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடியது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று மதியம் வெளியிடப்பட்டது.

மளமள்வென்று இதன் பார்வைகள் கூட எட்டு மணிநேரத்துக்குள் 15 லட்சம் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. ஆங்கிலப் படங்களுக்கு ஈடாக படமாகப்பட்டிருக்கும் இந்தப்பட டீஸர் வெளியான நாளிலேயே சாதனை படைத்ததில் வியப்பொன்றுமில்லை.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், விக்ரம், அக்ஷராஹாசன், அபிஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’.

சாதனை படைத்த டீஸர் கீழே…