April 26, 2025
  • April 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ட்விட்டரை கலக்கும் விஷால் அனிஷா ரெட்டி புகைப்படங்கள்
January 15, 2019

ட்விட்டரை கலக்கும் விஷால் அனிஷா ரெட்டி புகைப்படங்கள்

By 0 2001 Views

சமீபத்தில் விஷாலின் திருமண அறிவிப்பு அவர் வாக்குமூலத்துடனேயே வெளிவந்தது. அவர் அனிஷா ரெட்டி என்கிற யுவதியை மணக்கவிருக்கிறார் என்ற அளவில் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து விஷால் மணக்கவிருக்கும் அனிஷா ரெட்டி இவர்தான் என்று சமூக வலைத் தளங்களில் ஒரு பெண்ணின் படம் உலா வர, அதைத் தொடர்ந்து விஷாலின் செய்தித் தொடர்பாளர் அந்தப்பெண் அனிஷா ரெட்டி இல்லை என்று அறிவித்ததுடன், விஷாலின் திருமணம் பற்றிய விவரங்களை நாங்களே முறைப்படி அறிவிப்போம் என்றார்.

இந்நிலையில் இன்று மாலை திடீரென்று விஷாலும், ரியல் அனிஷா ரெட்டியும் (?) இருக்கும் புகைப்படங்கள் சில ட்விட்டரில் உலா வர ஆரம்பித்திருக்கின்றன. விஷால் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டு நிற்க, இவர்தான் விஷால் மணக்கவிருக்கும் ‘அனிஷா அல்லா ரெட்டி’ என்று தகவல் பரவுகிறது.

இவர்தான் ஒரிஜினலா இல்லையா என்பதை நாளை விஷாலின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்வார் என்று நம்பலாம்..!

கீழே படங்கள்…

Vishal Anisha Reddy

Image 1 of 3