March 28, 2024
  • March 28, 2024
Breaking News
July 4, 2020

சென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு

By 0 535 Views

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் ஜூலை 6 முதல் என்ன வகையிலான தளர்வுகள் சென்னைக்கு இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  • சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்
  • டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்
  • உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
  • தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி
  • வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம்

இந்த தளர்வுகள் மறு உத்தரவு வரும்வரை நீடிக்கும்.