April 28, 2024
  • April 28, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • அரசுப் பள்ளிகளில் 13 முதல் ஆன்லைன் கல்வி – தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு 27ல் தேர்வு
July 8, 2020

அரசுப் பள்ளிகளில் 13 முதல் ஆன்லைன் கல்வி – தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு 27ல் தேர்வு

By 0 676 Views

தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகின்றனர்.

இதே போன்று அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆன்லைன் கல்வி மற்றும் தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கான தேர்வு குறித்து அவர் கூறியதிலிருந்து…

“தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வரும் 13-ந்தேதி மூலம் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும். பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.

பிளஸ் 2 இறுதித்தேர்வு  எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந்தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 24ந்தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

மாணவர்கள் புதிய நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 13ந்தேதி முதல் 17ந்தேதி வரை பள்ளிகளிலும் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் தனித்தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

 
இறுதித் தேர்வு முடிந்தவுடன் 4 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்..!”