March 20, 2025
  • March 20, 2025
Breaking News

Tag Archives

கொரோனா வருமான பாதிப்பில் ஆட்டோ ஓட்டும் நடிகை

by on July 5, 2020 0

லாக் டவுன் பாதிப்பால் மும்பையில் குணச்சித்திர நடிகர் படம் விற்பதாக செய்தி வந்தது. அதேபோல  கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால் அதுதான் உண்மை. அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது கொரோனா காலத்தில் நாடகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு […]

Read More

சென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு

by on July 4, 2020 0

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் ஜூலை 6 முதல் என்ன வகையிலான தளர்வுகள் சென்னைக்கு இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க […]

Read More

வட சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ அணிவகுப்பு வீடியோ

by on June 25, 2020 0

சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலனளிக்கவில்லை. […]

Read More

முழு ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்

by on June 20, 2020 0

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.  வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது. தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 […]

Read More

முதல் படம் முடியாமலேயே லாக் டவுனில் மரணம் அடைந்த இயக்குனர்

by on June 10, 2020 0

“உடுக்கை” பட இயக்குனர் பாலா என்ற பால மித்திரன் 09.06.2020 அன்று காலமானார். இவர் இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். “உடுக்கை” படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்களே மீதி உள்ளது. இந்த நிலையில் வாதம் நோயால் பாதிக்கப் பட்டு, சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். உடல்நிலை மேலும் மோசமாக, பண வசதியில்லா காரணத்தால் இயக்குனர்கள் சங்கம் மூலமாக காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் […]

Read More