March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • முதல் படம் முடியாமலேயே லாக் டவுனில் மரணம் அடைந்த இயக்குனர்
June 10, 2020

முதல் படம் முடியாமலேயே லாக் டவுனில் மரணம் அடைந்த இயக்குனர்

By 0 481 Views

“உடுக்கை” பட இயக்குனர் பாலா என்ற பால மித்திரன் 09.06.2020 அன்று காலமானார்.

இவர் இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். “உடுக்கை” படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்களே மீதி உள்ளது. இந்த நிலையில் வாதம் நோயால் பாதிக்கப் பட்டு, சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

உடல்நிலை மேலும் மோசமாக, பண வசதியில்லா காரணத்தால் இயக்குனர்கள் சங்கம் மூலமாக காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் உடல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற அவரின் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது ஆத்மா சாந்தி பெறட்டும்…