May 5, 2024
  • May 5, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

கபில் ரிட்டன்ஸ் படத்தின் திரை விமர்சனம்

by by Nov 3, 2023 0

விளையாட்டை முன்னிறுத்தி இதுவரை வந்த படங்கள் பெரும்பாலும் கதையின் நாயகனோ, நாயகியோ ஒரு விளையாட்டில் தனித்துவம் பெற்று விளங்க, அவர்களுக்கு சாதிப்பதற்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுவதும், பின்னர் ஒரு நல்லவர் ஊக்கத்தால் அவர்கள் சாதனை படைககும் கதையைக் கொண்டதாகவே இருக்கும்.

ஆனால் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான விளையாட்டுக் கதையைச் சொல்ல முயசித்திருக்கிறார் இயக்குனரும், படத்தின் நாயகனுமான ஶ்ரீனி சௌந்தர்ராஜன். தயாரிப்பாளரும் அவரேதான்.

கதைப்படி நாற்பது வயதாகும் அவருக்கு அடிக்கடி கெட்ட கனவு ஒன்று வந்து அவரைக் கொலைகாரரக…

Read More

லியோ திரைப்பட விமர்சனம்

by by Oct 20, 2023 0

நம்ம ஹீரோக்களுக்கு ஒரு வீக்னஸ் உண்டு – தங்கள் சொந்த வாழ்க்கைக் கதையை அப்படியே டைரக்டர்கள் படக் கதையாக சொல்லி விட்டால் ‘படக்’கென்று அப்பீலே இல்லாமல் அதை ஒத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ்
இப்படி விஜய்யிடம் கதை சொல்லி இருக்கக் கூடும்.

“படத்துல நீங்க நடுத்தர வயதுள்ள அப்பாவா வர்ரீங்க. உங்களுக்கு டீன் ஏஜ்ல ஒரு மகன்… அதைவிட சின்னதா ஒரு மக இருக்கா. திரிஷாதான் உங்க மனைவி. உங்களைப் பெற்ற அப்பா உங்களுக்கு எதிரி.
அப்பா உங்களை…

Read More

புது வேதம் படத்தின் திரை விமர்சனம்

by by Oct 18, 2023 0

சமூகத்தால் மற்றும் குடும்பத்தால்  வஞ்சிக்கப்பட்டவர்களும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்..? எனில் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்..? என்பதை தன்னால் முடிந்த அளவுக்கு இயல்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ராசா விக்ரம்.

பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை நாம் அதிகம் அறியாததுதான். இப்படியும் நடக்குமா என்ற கேள்வி அவர்களது வாழ்க்கையைப் பற்றிக் கேட்க நேரும்போது நமக்கு ஏற்படுவது இயல்புதான்.

அப்படி கதையின் நாயகனாக வரும்  விக்னேஷ், சிறிய வயதிலேயே சுயநலம் கொண்ட தாயால் புறக்கணிக்கப்பட்டு குப்பை மேட்டிலேயே வளர்கிறார்….

Read More

சமாரா திரைப்பட விமர்சனம்

by by Oct 12, 2023 0

வரிசையான காட்சிகளில் கதை சொல்லும் யுக்திகளை மாற்றி ‘நான் – லீனியர்’ எனப்படும் ஒழுங்கற்ற காட்சிகளை அமைத்துக் கதை சொல்வது ஒரு பாணி. அதில் உச்சம் இந்தப் படம் என்று சொல்லலாம்.

இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் ஓரிடத்தில் பனிமலையில் சில உடல்கள் சிதறிக் கிடக்க அங்கே விசாரணைக்கு வருகிறார் காவல்துறை அதிகாரி ரகுமான்.

அதற்குப் பின் 60களில் பெர்லினில் நடந்த சில காட்சிகள் நாடகம் போல் காட்டப்படுகின்றன அந்த…

Read More

குண்டான் சட்டி திரைப்பட விமர்சனம்

by by Oct 11, 2023 0

தமிழில் அனிமேஷன் படங்களின் முயற்சி எப்போதோ நடக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம்.

அப்படி ஒரு முயற்சியை 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி உருவாக்கியிருப்பது அதைவிட ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றைக் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல் பெரியவர்களும் அவர்களை எப்படி நடித்த வேண்டும் என்பதையும் சொல்கிறது படம்.

Read More

தி ரோட் திரைப்பட விமர்சனம்

by by Oct 10, 2023 0

நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடப்பது இயல்பு. ஆனால் அதுவே திட்டமிட்டு நடந்தால்..? கேட்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா..? அப்படி ஜோடிக்கப்பட்ட ஒரு விபத்தின் மூலம் நம்மை பதைபதைப்புக்கு உள்ளாக்கி படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன்.

அடுத்த காட்சியில் பத்திரிகையாளராக வரும் நாயகி த்ரிஷா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கன்னியாகுமரி நோக்கிச் செல்ல முடிவெடுக்க, நமது பதற்றம் இன்னும் அதிகரிக்கிறது.

எதிர்பார்த்தது போலவே திரிஷா செல்லும் காரும் விபத்துக்குள்ளாகி கணவரும், குழந்தையும் கொல்லப்படுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத பரிதவிப்பில்…

Read More

தில்லு இருந்தா போராடு படத்தின் விமர்சனம்

by by Oct 10, 2023 0

பெரிய ஹீரோக்கள் – பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை விட சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் சின்ன ஹீரோக்களின் படங்கள்தான் பெரும்பாலும் சமூகத்துக்கு செய்தியைச் சொல்லக்கூடிய படங்களாக இருக்கின்றன.

அப்படி கார்த்திக் தாசை ஹீரோவாகக் கொண்டு எஸ்.கே.முரளிதரன் இயக்கியிருக்கும் படம்தான் இது.

அறிமுகக் காட்சியிலேயே நாயகன் கார்த்திக் தாஸ் ஒரு மரத்தடியில் வைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கிருந்து காட்சிகள் பின்னோக்கிப் போகின்றன.

ஏழைத் தம்பதிக்கு மகனாகப் பிறந்த கார்த்திக் தாஸ், ஒரு தங்கை இருந்தும், பொறுப்பின்றி தன்…

Read More

எனக்கு என்டே கிடையாது திரைப்பட விமர்சனம்

by by Oct 9, 2023 0

தன்னம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் முதல் படம் இயக்கும்போது அந்தப் படத்தில் தானே ஹீரோவாக நடிப்பார்கள். இதற்கு பார்த்திபனில் இருந்து பிரதீப் வரை உதாரணங்கள் சொல்லலாம். 

அந்த வரிசையில் சேர்கிறார் இந்தப் பட இயக்குனர் விக்ரம் ரமேஷ்.

இந்தப் படத்தின் முதன்மை நாயகனாக, கால் டாக்ஸி டிரைவராக வரும் அவருக்கு பெப்ஸி நழுவி விஸ்கியில் விழுந்தது போல் அடுத்தடுத்து அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன – ஒரு பப்பில் இருந்து நாயகி ஸ்வயம் சித்தாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது.

மிகப்பெரிய…

Read More

800 படத்தின் திரை விமர்சனம்

by by Oct 8, 2023 0

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் யாரும் எட்ட முடியாத உயரமான 800 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையைச் செய்தவர் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முத்தையா முரளிதரன்.

தமிழரான அவரது வாழ்க்கை சாதனைகள் நிரம்பியது என்றாலும் எத்தனை சோதனைகளைத் தாண்டி அதைச் சாதித்தார் என்பதை அந்தப் போராட்ட வலிகளோடு இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி.

முத்தையா முரளிதரனின் சிறு வயது முதலே அவரது வாழ்க்கை படத்தில் சொல்லப்படுகிறது. கிரிக்கெட் மீதான ஆசையால் அவர் உறைவிட பள்ளிக்குச் சென்றது…

Read More

இந்த கிரைம் தப்பில்ல திரைப்பட விமர்சனம்

by by Oct 7, 2023 0

பெண் இனத்துக்கு கொடுஞ்செயல் புரியும் காமுகர்களை சட்டத்தை மீறி தண்டித்தாலும் அந்த கிரைம் தப்பில்லை என்பதுதான் படத்தின் ஒன் லைன். இதைத் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் தேவகுமார்.

ஒரு பக்கம் கிராமத்துப் பெண் நாயகி மேக்னா இலன், நகரத்துக்கு வந்து மார்டனாகி செல்போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கு வரும் மூன்று வாலிபர்களோடு தனித்தனியாக அறிமுகமாகி அவர்களைக் காதலிப்பது போல் நடிக்கிறார். அது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இன்னொரு பக்கம், ஓய்வு…

Read More